மக்களுக்கு இக்கட்டான சூழல் வரும்போது திரைபிரபலங்கள் அவர்களுக்கு உதவுவது என்பது வழக்கமான செயல் தான். ஆனால் தற்போது சின்னத்திரையில் உள்ள பிரபலங்கள் பலரும் மக்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும் போது தங்களால் முடிந்த உதவிகளை செய்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் நம் மனதில் நெகிழ்வை தான் ஏற்படுத்துகிறது.
இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு என்றால் அது சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள். சில மாதங்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்ப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அதன் பிறகு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலால் சென்னையில் மழை மற்றும் வெள்ளம் என பெரும் பாதிப்பு ஏற்பட்டது, பல பகுதிகளில் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சொல்லப்போனால் பல மக்கள் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட செல்ல முடியாத அளவுக்கு துன்பம் அடைந்தனர். இதனால் பல அரசு மற்றும் பல தனியார் தொண்டு நிறுவனங்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு அவர்களுக்கு உதவி செய்தது. அந்த நேரத்தில் அரசும் பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்கா பல முயற்ச்சிகளில் ஈடுப்பட்டது.
இந்நிலையில் தான் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தனர். ஆனால் அதிக அளவில் சின்னத்திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது. அவர்களில் முக்கியமான ஒருவர் என்றால் அது நம் KPY Bala தான். இவர் செய்த உதவிகளை பற்றி நாங்கள் செல்ல தேவையில்லை, மற்றும் அவை அனைத்தும் நாம் அனைவருக்கும் நினைவில் தான் உள்ளது.
இவர் இது போன்ற நேரங்களில் மட்டும் மக்கள் பணிகளை மேற்கொள்வதில்லை. இவர் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல உதவிகளை செய்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எனக்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லை என்றும் இறுதிவரை மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தான் செய்யும் உதவிகளுக்கு மக்களிடம் இருந்து வரும் பாசிடிவ் ஆன கமெண்ட்ஸ் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்த ராசிகளுக்கு இனி லக் தான்..! செல்வம் வீட்டை தேடி வருமாம்..! |