Homeசமையல் குறிப்புகள்சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

குல்பி ஐஸ் பிடிக்காதவர்களே இருக்க முடியாது அதுவும் இந்த வெயில் காலத்தில் இந்த ஐஸை எங்கு பார்தாலும் நாம் வாங்கி உண்பது வழக்கமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பொருள் தான் இந்த குல்பி. அதிலும் குழந்தைகள் என்றால் செல்லவே வேண்டாம். ஆனால் கடைகளில் விற்கப்படும் குல்பிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்யப்படுகிறதா என்று கேட்டால் அது கேள்வி குறிதான். எனவே நாம் எளிமையாக வீட்டிலேயே குல்பி செய்வது எப்படி (Kulfi Recipe in Home) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

குல்பி செய்வது எப்படி (Kulfi Recipe in Tamil)

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 50 கிராம்
  • கார்ன்ஃப்ளார் – 3 ஸ்பூன்
  • பாதாம் – 50கி
  • முந்திரி – 50கி
  • ஏலக்காய் தூள் – 1 பின்ச்
  • பாதாம் எஸ்சன்ஸ் – 1 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்சவும்.
  • அந்த பால் பாதியாக குறையும் வரை நன்றாக காய்ச்சவும். பின்னர் அந்த பாலில் சர்க்கரையை சேர்த்து அது நன்கு கரையும் பாலை காய்ச்சவும்.
  • பின்னர் இந்த கஸ்டர்டு பவுடரை கால் கிண்ணம் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் விடவும்.
  • அடுப்பு தீயை மிதமாக வைத்திருக்க வேண்டும். மேலும் அதனை கை விடாமல் 3 நிமிடம் வரை கிளறவும்.
  • பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய்ப்பொடி மற்றம் பாதாம் எசன்ஸ் என இரண்டையும் சேர்க்கவும்.
  • இந்த கலவை நன்றாக ஆறினவுடன் அதனை Freezer ல் வைக்கவும். ஒரு அரைமணி நேரம் கழித்து அதனை எடுத்து பெரிய மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக நுரை(bubble) வரும் வரை ஓரிரு நிமிடம் விட்டு விட்டு அரைக்கவும்.
  • பின்னர் பாதாம் மற்றும் முந்திரியை சின்ன மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • இப்போது அரைத்த் ஐஸ்க்ரீம் உடன் நாம் கொரகொரப்பாக அரைத்த பாதாம் மற்றும் முந்திரியின் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது மீண்டும் இவற்றை குல்ஃபி கப்பில் ஊற்றி இரவு முழுவதும் freezerல் வைத்து எடுத்தால் சுவையான குல்ஃபி தயார்.

நாம் இப்பதிவில் சுவையான குல்பி வீட்டிலேயே செய்வது எப்படி (Kulfi Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

Kulfi Seivathu Eppadi
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular