தொழில்நுட்பம்

KYC என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா..!

வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் சார்ந்த வார்த்தையே KYC என்பதாகும். RBI ஆல் அனைத்து வங்கிகளுக்கும் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளில் ஒன்று தான் KYC. இதன் விரிவாக்ம் தமிழில் ”உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்” என்பதாகும். இதன் வழிகாட்டுதலின் பேரில் வங்கியானது ஒரு கணக்கின் உரிமையாளர் யார்? அவர் செய்யும் தொழில் என்ன? அவர் செய்யும் பண பரிவர்த்தனைக்கான காரணம் என்ன? அவர் கணக்கிற்கு பணம் எங்கிருந்து வருகிறது? போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.

KYC Meaning in Tamil

KYC Full Form Know Your Customer என்பதாகும். இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது தான் கேஒய்சி சேவை. இதன் முதன்மையான நோக்கம் கருப்பு பணத்தை (Black Money) ஒழிப்பது ஆகும், அதுமட்டும் இன்றி வங்கி வாடிக்கையாளரின் உண்மையான முகவரி, அவர் செய்யும் தொழில், வாடிக்கையாளருக்கு வரும் பணம் சட்டபூர்வமானது தானா போன்றவற்றை தெரிந்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிப்பதனால் இதனை Offline KYC அல்லது In-Person-Verification என அழைக்கப்படுகிறது.

வங்கியில் KYC-ன் பயன்பாடு

ஒரு வாடிக்கையாளர் வங்கியில் கணக்கை தொடங்குவதற்க்கு அவரின் நிரந்தர முகவரி, அடையாள அட்டை, செய்யும் தொழில் பற்றிய விவரங்கள் மற்றும் வாடிக்கையாளரின் தற்போதைய புகைப்படம் முதலிய ஆவணங்களை ஆதாரங்களாக வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு வங்கியால் வாடிக்கையாளர் சமர்ப்பித்த விவரங்கள் உண்மையானது தானா என சரிபார்க்கப்படும், இதுவே நோ யுவர் கஸ்டமர் என அழைக்கப்படுகிறது.

KYC ஆவணங்கள் (Documents)

வாடிக்கையாளர் தங்களின் இரண்டு முக்கியமான தகவல்களை KYC Documents ஆக சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.

  • முகவரி சான்று (Address Proof)
  • அடையாள சான்று (Identity Proof)

முகவரி சான்று

வாடிக்கையாளர் கணக்கு தொடங்க இருக்கும் வங்கியில் அவரின் நிரந்தர முகவரி சான்றை கொடுத்தால், மற்ற அடையாள ஆவணங்களின் தேவை குறைவு. ஒருவேலை தற்காலிக முகவரியை வங்கியில் கொடுத்தால், அவர் முகவரி சான்றுதலுடன் அடையாள அட்டை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏன்னென்றால் வங்கி வாடிக்கையாளரின் முகவரியை அவ்வப்போது சரி பார்க்கும், எனவே KYC -க்கு முகவரி சான்றாக எரிவாயு சிலிண்டர் ரசீது, மின்சார கட்டண ரசீது போன்றவைகளை ஆவணமாக சமர்பிக்கலாம்.

அடையாள சான்று

முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் தவிர வேறு எந்த ஒரு பெரிதான மாற்றங்கள் அடையாள அட்டையில் ஏற்படுவது இல்லை. KYC -க்கு சமர்ப்பிக்கப்படும் அடையாள ஆவணங்களில் பயன்படுத்த கூடியவை.

  • ஆதார் அட்டை (Aadhaar Card)
  • பான் கார்டு (Pan Card)
  • கடவுச்சீட்டு (Passport)
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  • ரேசன் கார்டு (Ration Card)

KYC-க்கு சட்டப்பூர்வ ஆதரவு உண்டு

Reserve Bank of India (RBI) 2002 ஆம் ஆண்டு KYC சேவையை அனைத்து வங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தியது. 31 டிசம்பர் 2005 ஆண்டுக்கு முன்னதாக தொடங்கிய கணக்குகளையும் கேஒய்சி விதிகளுக்கு இணங்கி வங்கி வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை சேகரித்து சரிபார்க்க வேண்டும் என RBI உத்தரவிட்டது. இதன் நோக்கம் பண மோசடி, சட்டத்துக்கு புறம்பான பண பரிமாற்றம், பயங்கரவாத நிதியை தடுப்பதும், வாடிக்கையாளர் வங்கியின் சேவையை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துவது ஆகும். வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35A விதி எண் 7-ன் படி மேல் உள்ள KYC வழிகாட்டுதலை மீறினால் தண்டனை வழங்கப்படும்.

KYCFAQ

e-KYC என்றால் என்ன?

e-KYC என்பதன் விரிவாக்கம் Electronic Know Your Customer or Electronic Know Your Client. மின்னணு முறையில் ஆதார் மூலம் வாடிக்கையாளர் முகவரி மற்றும் அடையாளத்தை சரிப்பார்ப்பது ஆகும்.

KYC -ல் எத்தனை வகைகள் உள்ளன?

KYC -ல் இரண்டு வகைகள் உள்ளன. அவை 1. Offline KYC அல்லது In-Person-Verification (IPV) KYC, 2. Aadhaar-based KYC (eKYC).

எவ்வாறு KYC நிலையை சரிபார்க்கலாம்?

KYC Registration Agency (KRA) இணையதல பக்கத்திற்கு சென்று உங்கள் பான் கார்டு (PAN card) எண்னை உள்ளிடவதன் முலம் KYC நிலையை சரிபார்க்கலாம்.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago