Laddu Recipe in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். உணவு சாப்பிடுவது போன்று இனிப்பு சாப்பிட காலம் நேரம் பார்க்க தேவையில்லை. எப்போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் சுவையான இனிப்பு வகைகள் சாப்பிடிலாம்.
நமது பழக்க வழக்கத்திற்கும் இனிப்பு வகைகளுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. உணவு பரிமாறும் போது முதலில் வைக்கப்படும் பண்டமாக இனிப்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல் எந்த ஒரு நல்ல செய்தி சொல்வது என்றாலும் அனைவரும் இனிப்பு தருவது தான் தமது கலாச்சாரம் ஆகும். அந்த வைகயில் அனைவருக்கும் பிடித்த இனிப்பான பூந்தி லட்டு (Boondi Laddu) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் (Laddu Recipe in Tamil) பதிவிட்டுள்ளோம்.
Table of Contents
பூந்தி லட்டு செய்வது எப்படி (Laddu Seivathu Eppadi) Laddu Recipe in Tamil
அனைத்து விசேஷத்திற்கும் திருவிழா நாட்களிலும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைதான் லட்டு ஆகும். இந்த இனிப்பான பூந்தி லட்டை (Laddu Seivathu Eppadi) செய்வதற்கான செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் பதிவிட்டுள்ளோம்.
தேவையான பொருட்கள் (Laddu Ingredients)
- கடலைமாவு – 1 கிலோ
- சர்க்கரை – 2 கிலோ
- ஏலக்காய் – 25 கிராம்
- திராட்சை – 50 கிராம்
- முந்திரி – 50 கிராம்
- நெய் – 400 கிராம்
- எண்ணெய் (பொரிப்பதற்கு) – தேவையான அளவு
லட்டு செய்முறை (How to Make Laddu)
- முதலில் கடலை மாவை கட்டி இல்லாமல் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு கடலை மாவுடன் சிறிது சிறிதாக நீர் ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும் (மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).
- அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஜர்னி கரண்டியில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி தட்ட வேண்டும்.
- மாவை ஜர்னி கரண்டியில் வைத்து தேய்க்காமல் தட்டினால் பூந்தி தனி தனியாக விழ வேண்டும். அதேபோல் பூந்தி 60 சதவீதம் வெந்தால் போதுமானது முழுவதும் வேக கூடாது.
- அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் சிறிது நெய் மற்றும் மஞ்சள் புட் கலர் சேர்க்க வேண்டும்.
- அதன் பிறகு சர்க்கரை பாகுடன் பொரித்து வைத்துள்ள பூந்தியை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பூந்தி சர்க்கரை பாகை இழுத்த பிறகு பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்க வேண்டும் (பூந்தியை மிகவும் கெட்டியாக கிளற கூடாது. பூந்தி ஆறிய பிறகு மிகவும் கடினமாக இருக்கும், எனவே பூந்தி தளர்வாக இருக்கும் போது இறக்கினால் ஆறிய பிறகு லட்டு பிடிக்கலாம்).
- அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நெய் விட்ட வேண்டும். நெய் சூடான பிறகு முந்திரி மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை பூந்தியில் தேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- அதன் பிறகு 2 முதல் 3 மணி நேரம் வரை நன்றாக ஆறவிட வேண்டும். பின் பூந்தியை சற்று அழுத்தி பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டினால் (உருட்டும் போது சற்று அழுத்தி பிசைந்து உருட்ட வேண்டும்) லட்டு தயார்.
Laddu Recipe: திருப்பதி லட்டுக்கு இணையான… சுவை மிகுந்த பூந்தி லட்டு செய்வது எப்படி…
இந்த பதிவில் பூந்தி லட்டு செய்வதற்கான (Laddu Recipe in Tamil) ஈஸியான செய்முறையை பதிவிட்டுள்ளோம்.
Type: Dessert
Cuisine: Tamil Nadu
Keywords: Laddu Recipe, How to Make Laddu
Recipe Yield: 10
Preparation Time: PT20M
Cooking Time: PT45M
Total Time: PT1H5M
Recipe Ingredients:
- Groundnut flour – 1 kg
- Sugar – 2 kg
- Cardamom – 25 grams
- Raisins – 50 grams
- Cashew – 50 grams
- Ghee – 400 grams
- Oil (for frying) – required amount
4.5