HomeசினிமாLal Salaam Box Office Collection: தலைவர்னா சும்மாவா..! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Lal Salaam Box Office Collection: தலைவர்னா சும்மாவா..! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் ரஜினி காந்த். இவர் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார்.இவருடைய படங்களும் மக்கள் மத்தியில் வெற்றி பெறுவது தான் வழக்கம். இந்நிலையில் தான் தற்போது இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்பம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததா என பலரிடத்திலும் பல கேள்விகள் இருக்கலாம், எனவே நாம் இப்பதிவில் லால் சலாம் படத்தின் வசூல் (Lal Salaam Vasool) குறித்துப் பார்க்கலாம்.

இந்த லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் (Lal Salaam Box Office Collection) நல்ல தொடக்கத்துடன் தான் தொடங்கியது. இப்படம் வெளியான முதல் நாளில் ₹4 கோடி வரை வசூல் செய்தது. அதுமட்டுமின்றி முதல் நாள் வசூலில் இருந்து குறையாமல் இப்படம் இரண்டாவது நாளிலும் ஏற்றம் கண்டது இரண்டாவது நாளில் ₹5 கோடி வரை வசூல் செய்தது. இதன் வசூல் காரணமாக வெளியான இரண்டு நாட்களில் இப்படம் மொத்தம் ₹9 கோடிகளை குவித்தது. மேலும் மூன்றாம் நாளான ரூ.3.25 கோடி வரை வசூலானது என்று கூறப்படுகிறது.

எனினும் இந்த படத்தின் பட்ஜெட் ₹80 முதல் ₹90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த படம் இன்னும் அதிக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் (Lal Salaam Box Office) செய்ய வேண்டும். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இப்படம் நல்ல வசூலை எட்டும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது.

Lal Salaam Vasool
இதையும் படியுங்கள்: Lover Movie Box Office Collection: இரண்டு நாளில் இத்தனை கோடியா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular