Homeமெஹந்தி டிசைன்லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன்..! Latest Mehndi Design..!

லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன்..! Latest Mehndi Design..!

பெண்களின் அதிக தேடல்கள் வரிசையில் மெஹந்தி டிசைன் (Mehndi Design) எப்பொழுதும் முதலிடம் தான். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ளும் அலாங்கார வரிசையில் மெஹந்திக்கு எப்பொழுதும் தனி இடமுண்டு. நம் கலாச்சாரத்தில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் மற்றும் விருந்து போன்ற சுபநிகழ்ச்சியில் மணப்பெண் மட்டுமல்லாமல் மணமகனுக்கும் முதல் நாள் மெஹந்தி வைத்து ஒரு விழாவாக நடத்துவாா்கள். என்னதான் பெண்கள் விதவிதமாக தங்களை அழகுப்படுத்திக்கொண்டாலும் மெஹந்தி அவா்கள் கைகளிலும், கால்களிலும் வைத்துக்கொண்டால்தான் அவா்களின் அலங்காரம் முழுமைப்பெற்றதாக உணர்வாா்கள். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் பெண்களின் முதல் தேடல் மெஹந்தி வடிவமைப்பு. ஆமாம் இங்கு பலருக்கும் மெஹந்தியில் என்ன வகைகள் உள்ளது என்ன வடிவமைப்பு இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாது. கலைநயத்துடன் வரைவதற்கு சில மெஹந்தி கலைஞர்கள் (Mehndi Designers) இதற்கென்றே பயிற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு சில நபர்கள் மெஹந்தி படத்தை (Mehndi Image) பாா்த்து தங்களின் திறமையை காட்டி விடுவார்கள்.

அழகான மெஹந்தி டிசைன்கள் தேடிக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இனி அந்த கவலையும் உங்களுக்கு இல்லை ஆமாங்க நீங்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு Latest Mehndi Design in Tamil எளிமையாக (Easy Mehndi Design) நமது வலைதளத்தில் மெஹந்தியின் வகைகள் மற்றும் அதன் அழகான படம் (Mehndi Design Beautiful HD Images) எல்லாம் பதிவிட்டுள்ளோம்.

அரபிக் மெஹந்தி டிசைன் (Arabic Mehndi Designs)

 Arabic Mehndi Designs

இந்த வகையான டிசைன்கள் அரபு நாடுகளில் பிரபலமாக இருந்தாலும் காலப்போக்கில் மெஹந்தி பிரியா்களினால் உலகம் முழுவதும் பரவியது. இந்த வகையான டிசைன்கள் அனைவரையும் ஈா்க்கும் வகையில் இருப்பதற்கான காரணம், இதில் உள்ள மலர் வடிவமைப்பு இலையுடன் கூடிய கிளைகள் மற்றும் நேர்த்தியான நோ்க்கோடுகளாலும் அனைவரது கண்களையும் கட்டி ஈா்க்கின்றது.

மேலும் படிக்க: அரபிக் மெஹந்தி டிசைன்..!

பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்கள் (Pakistani Mehndi Design)

Pakistani Arabic Mehndi Design

இவைகள் பார்ப்பதற்கு நெருக்கமாகவும், கனமாகவும் தெரிந்தாலும் உண்மையில் இவைகள் எளிதான மற்றும் இலகுவான வடிவமைப்புடன் காணப்படுகிறது. அரபிக் டிசைன் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான மலர்கள் மற்றும் சுழல் போன்ற வடிவமைப்பை கொண்டது.

கிளிட்டர்ஸ் மெஹந்தி டிசைன்கள் (Glitter Mehndi Design)

Glitter Mehndi Design

இந்த வகையான மெஹந்தி டிசைன்ஸ் நாம் பயன்படுத்தும் மெஹந்திற்கு மாற்றானது. இது மினுமினுப்பு தன்மைக் கொண்டது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்காது குறைந்தபட்சம் 6-8 மணி நேரம் கொண்டதாக இருக்கும்.

முகலாயர் மெஹந்தி டிசைன்கள் (Mughal Mehndi Designs)

Mughal Mehndi Design

முகலாயர்கள் பற்றியும் அவர்களது கட்டிடக்கலை, பெண்களின் உடைகள் மற்றும் அணிகலன்கள், அரசன், அரசி ஆகியோரை உருவகப்படுத்தி வரையப்பட்ட வடிவமைப்பு தான் இந்த வகையான டிசைன்கள். மெஹந்தியின் மீது கொண்ட ஆர்வத்தினால் கடந்த சில வருடங்களாக முகலாயர் மெஹந்தி டிசைன்கள் பிரபலமாக தொடங்கிவிட்டன.

கோல் டிக்கா மெஹந்தி டிசைன்கள் (Gol Tikki Mehndi Designs)

Gol Tikki Mehndi Design

இந்த வகையான மெஹந்தி வடிவமைப்பில் வட்டமான (Circle Mehndi Design) ஒரு சக்கரத்தை போன்ற அழகான வடிவமைப்பு இருக்கும். பல புள்ளிகளை இணைப்பதன் மூலம் இந்த வட்டவடிவமான டிசைன் கிடைக்கிறது. இது பெரும்பாலும் மலர்கள் போன்ற டிசைன்களை கொண்டதாக உள்ளது. உள்ளங்கைகளுக்கு ஏற்றவாறு விரல்களிலும் அதே வடிவமைப்பு வரையப்படுகிறது.

பீக்காக் மெஹந்தி டிசைன்கள் (Peacock Mehndi Design)

Peacock Mehndi Design

மெஹந்தி டிசைன்களில் அதிகமாக விரும்பப்படும் டிசைன்களில் ஒன்றுதான் மயில் மெஹந்தி டிசைன். அனைவரும் இதனை ஒரு அதிர்ஷ்டமாக பார்க்கிறாா்கள்.

மேலும் படிக்க: மயில் மெஹந்தி வடிவமைப்பு..!

பின் கை வடிவமைப்பு மெஹந்தி டிசைன்கள் (Back Hand Mehndi Designs)

Back Hand Mehndi Design

இந்த வகை டிசைன்கள் கைகளின் பின்புறம் வரையப்படுகிறது. உள்ளங்கைகளில் வரையப்படும் டிசைன்களுக்கு ஏற்றவாறு இதற்கும் முக்கியத்துவம் அளித்து வரையப்படுகிறது.

முன் கை வடிவமைப்பு (Front Hand Mehndi Design)

Front Hand Mehndi Design

மெஹந்தி டிசைன்கள் பெரும்பாலும் உள்ளங்கைகளில் வரைவாா்கள். முதல் முக்கியத்துவம் என்பது முன் கை டிசைன்களுக்கு தான்.

வெட்டிங் லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் (Wedding Mehndi Designs)

Wedding Mehndi Design

திருமண (வெட்டிங் டிசைன்ஸ்) மணமகன் மற்றும் மணமகள் உருவங்களை மெஹந்தியில் வரைவாா்கள். இது அவா்களுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். இதற்கு மணமகள் (Bridal Mehndi Design) மெஹந்தி டிசைன் என்றும் மற்றொரு பெயர் உண்டு.

விரல் மெஹந்தி டிசைன்கள் (Finger Mehndi Design)

Finger Mehndi Designs

மெஹந்தியில் வரையப்படும் வடிவமானது உள்ளங்கை மற்றும் பின் கை வடிவமைப்பு மட்டும் சார்ந்திருப்பது இல்லை. ஒவ்வொரு விரல்களிலும் தனித்தனியான டிசைன்களில் வரைவது ஒரு தனித்துவமான அழகைக்கொடுக்கும்.

கால் மெஹந்தி டிசைன்ஸ் (Leg Mehndi Design)

Leg Mehndi Design

பெரும்பாலும் திருமணம் நிகழ்ச்சிகளில் மணமகள் கால்களிலும் மெஹந்தி (Leg Mehndi Design) போட்டுக்கொள்வாா்கள். இது அவா்கள் கைகளில் போட்டுக் கொள்ளும் மெஹந்தி வடிவமைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு ஈடானது.

ஈத் மெஹந்தி டிசைன்கள் (Eid Mehndi Design)

Eid Mubarak Mehndi Design

இது ஈத் போன்ற பண்டிகைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். பார்பதற்கு ஈத் பண்டிகையை பிரதிபலிப்பதாகவும் தனித்துவமாகவும் இருக்கும். ரமலான் பண்டிகை, பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு பெண்கள் தங்களின் கைகளை அலங்கரித்துக் கொள்ள இது போன்ற Ramzan Mehndi Design- ஐ போட்டுக்கொள்ளலாம்.

Ramadan mehndi designs 2024 இந்த டிசைன் பார்ப்பதற்கு எளிமையாகவும், தனித்துவமாகவும் தெரிவதால் Ramadan Henna designs- களுக்கு சிறந்ததாக இது கருதப்படுகிறது.

துபாய் மெஹந்தி டிசைன்கள் (Dubai Mehndi Designs)

Dubai Mehndi Design

இந்த வகையான மெஹந்தி டிசைன்கள் அரபிக் டிசைன்களுடன் ஒத்துபோகின்றன. ஆனால் சற்று வித்தியாசமும், தனித்துவமானதாகவும் இருக்கும்.

ரோஸ் மெஹந்தி டிசைன்கள் (Rose Mehndi Designs)

Flower Mehndi Design

மலர்களை வைத்து வரையப்படும் டிசைன்களில் (Flower Mehndi Design) ரோஜா மலா்களின் வடிவமைப்பு கொண்ட டிசைன்களை ரோஸ் மெஹந்தி டிசைன் என்கிறோம்.

கிட்ஸ் மெஹந்தி டிசைன் (kids Mehndi Design)

Kids Mehndi Design

மெஹந்தி போட்டுக்கொள்வதில் பொியவா்களை விட குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவா்களுக்கு தான் அதில் ஆா்வமும் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். அவா்களின் கை அளவு மற்றும் அவா்களுக்கு பிடித்த டிசைன் என்று அவா்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு மெஹந்தி போட்டுக்கொள்வாா்கள்.

டாட்டூ மெஹந்தி டிசைன் (Tattoo Mehndi Designs)

Tatto Mehndi Design

ஒரு சில நபா்களுக்கு டாட்டூ போட்டுக்கொள்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் சில காரணங்களுக்காக அவா்கள் நிரந்தரமான டாட்டூக்களை போட்டுக்கொள்ளாமல் மெஹந்தியில் டாட்டூ டிசைன்களை வரைந்துக்கொள்வாா்கள்.

காஃபிஃப் லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் (Khafif Mehndi Design)

Khafif Mehndi Design

காஃபிஃப் மெஹந்தி டிசைன் என்ற சொல்லுக்கு அரபு சொல்லில் சிக்கலான என்பது பொருள். இந்த வகை டிசைன்கள் சிக்கலான வடிவமைப்பை கொண்டதாக இருந்தாலும் மிகவும் அழகான டிசைன்களில் ஒன்று. நிச்சியதாா்த்தம் (Engagement Mehndi Designs) போன்ற சுபநிகழ்ச்சிக்கு ஏற்ற மெஹந்தி டிசைன் இது.

மணமகன் மெஹந்தி டிசைன் (Groom Mehndi Designs)

 Groom Mehndi Design

இது மணமகனுக்காக வடிவமைக்கப்பட்ட மெஹந்தி டிசைன் ஆகும். இதில் பூக்கள், சுழல், சக்கரம் போன்ற எந்த விதமான டிசைன்களும் இடம்பெறாது. பொதுவாக இந்த வகை டிசைன்களில் மணமகன் மற்றும் மணமகள் இருவரின் பெயர்களின் முதலெழுத்து மற்றும் இருவரின் உருவங்களை வைத்து வரையப்படும். இது ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மெஹந்தி டிசைன் (Boys Mehndi Design) ஆகும்.

நகை மெஹந்தி வடிவமைப்பு (Jewellery Mehndi Designs)

Jewellery Mehndi Design

நகை மெஹந்தி வடிவமைப்பு கைகளின் பின்புறம் வரையப்படும் நகை போன்ற அமைப்பாகும். இதில் மோதிரம், வளையல், நெக்லஸ் போன்ற வடிவமைப்பு இருக்கும்.

முழு கை வடிவமைப்பு மெஹந்தி (Full Hand Mehndi Designs)

Full Hand Mehndi Design

இந்த முழு கை மெஹந்தி டிசைன்கள் அனைவரும் விரும்பக்கூடிய அழகிய டிசைன் ஆகும். இதில் தனித்துவமான எந்த ஒரு வடிவமைப்பும் கிடையாது. நமக்கு பிடிப்பது போல சுழல்கள், சக்கரங்கள், நேர்க்கோடுகள், மலர்கள் போன்ற வடிவமைப்பை பயன்படுத்தி நாம் வரைந்துக்கொள்ளலாம்.

லோட்டஸ் மெஹந்தி டிசைன் (Lotus Mehndi Design)

Lotus Mehndi Design

இந்த வகையான மெஹந்தி டிசைன்களில் தாமரை பூக்கள் வைத்து வரையப்படுகிறது.

ஹாா்ட் டிசைன் மெஹந்தி வடிவமைப்பு (Heart Shape Mehndi Design)

Heart Shape Mehndi Design

ஹார்ட் டிசைன் என்பது இதயம் வடிவமைப்பு ஆகும். இந்த வகையான மெஹந்தி டிசைன் அன்பு, பாசம் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது.

ராயல் மெஹந்தி டிசைன் (Royal Mehndi Designs)

Royal Front Hand Mehndi Design

இந்த வகை மெஹந்தி டிசைன்கள் பாா்பதற்கு அழகாகவும், நெருக்கமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலான மக்கள் இதனை தோ்வு செய்கிறாா்கள்.

மெஹந்தி டிசைன் – FAQ

1. மெஹந்தி டிசைன் அழிப்பது எப்படி?How to Remove Mehndi Stains From Hands Instantly?

மெஹந்தி டிசைன் மீது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஸ்க்ரப் செய்து கழுவினால் அழிந்துவிடும்.

2. நகங்களில் உள்ள மெஹந்தி கறையை எப்படி நீக்குவது? How to Remove Mehndi Stains From Nails?

நகத்தின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை வைத்து ஸ்க்ரப் செய்து கழுவினால் அழிந்துவிடும்.

3. எந்த ரசாயனம் மெஹந்தியில் கலக்கப்படுகிறது? Which Chemical is Mixed in Mehndi?

சந்தையில் விற்கப்படும் அதிக மெஹந்திகளில் சோடியம் பிக்ரேமேட்டுடன் (Sodium Picramate) கலக்கப்படுகிறது.

4. மெஹந்தி விழா என்றால் என்ன? What is Mehndi Ceremony?

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் இவ்விழாவில் மணமகள் கைகளில் மெஹந்தி வைத்து கொண்டாடுவார்கள். இதனை மெஹந்தி விருந்து என்று அழைப்பார்கள்.

5. மெஹந்தியை எப்படி வேகமாக கருமையாக்குவது? How Can I Darken My Mehndi Fast?

மெஹந்தி வைத்து சிறிது நேரத்தில் காய்ந்தவுடன் அதில் கடுகு எண்ணெய் தடவினால் கருமையாகிவிடும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular