தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம், தேர்தல் பணிகள் என்று தமிழகம் தேர்தலை நோக்கி தயாராகிக்கொண்டு இருக்கிறது. ஆளுங்களின் வாக்கு சேகரிப்பு பணி, எதிர்கட்சிகளின் வாக்கு சேகரிப்பு பணி என மாறி மாறி தங்களுக்கென்று தனி பட்டியல் அமைத்து அதன்படி வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கட்சிகள் தனியாகவும், கூட்டணி வைத்தும் தங்கள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். வரும் ஏப்ரல 19-ம் தேதி தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. ஜுன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகள் (Tamil Nadu makkalavai thoguthigal) எத்தனை என்பதும், அதில் தனித்தொகுதிகள் மொத்தம் எத்தனை என்பதை காண்போம்.
தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதி 39 விவரம் – (Tamil Nadu Nadalumandra Thoguthigal)
- திருவள்ளூர்
- வட சென்னை
- தென் சென்னை
- மத்திய சென்னை
- திருப்பெரும்புதூர்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- வேலூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- திருவண்ணாமலை
- ஆரணி
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- திருப்பூர்
- நீலகிரி
- கோயம்புத்தூர் ப
- பொள்ளாச்சி
- திண்டுக்கல்
- கரூர்
- திருச்சிராப்பள்ளி
- பெரம்பலூர்
- கடலூர்
- சிதம்பரம்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- சிவகங்கை
- மதுரை
- தேனி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- தென்காசி
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
தனி தொகுதிகள் (7) விவரம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- நீலகிரி
- சிதம்பரம்
- நாகப்பட்டினம்
- தென்காசி