Homeபொது தகவல்கள்சினிமாவில் அறிமுகமாகி அரசியலில் தலைவராக மாறிய பிரபலங்கள் இத்தனை பேரா?

சினிமாவில் அறிமுகமாகி அரசியலில் தலைவராக மாறிய பிரபலங்கள் இத்தனை பேரா?

அந்த பதிவில் நடிகர்கள் தொடங்கிய அரசியல் கட்சிகள் (Actors Political Party) பற்றி பார்க்க உள்ளோம். இந்திய அரசியலைப் பொறுத்தவரை அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்கள் தலைமை பொறுப்பில் இருந்துள்ளனர். சினிமா நடிப்பின் மூலம் நடிகர்களுக்கு மக்களிடையே நல்ல கவனம் பெறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தலைமை பொறுப்புகள் வரை வருகிறார்கள். இந்த பதிவில் சினிமா துறையில் அறிமுகம் ஆகி தலைவராக மாறிய பிரபலங்களை பற்றி பார்க்க உள்ளோம்.

சினிமாவில் நடிப்பதின் மூலம் நடிகர்கள் மக்களிடையே கவனம் பெறுகின்றனர். இதன் காரணமாகவே அரசியல் கட்சிகள் சினிமாதுறையில் இருக்கும் நடிகர்களை அரசியல் பெச்சாரத்தின் போது அழைத்து வருவார்கள். சில மக்களும் சினிமா நட்சத்திரங்களை காண்பதற்காக கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டும் அல்லாமல் சில சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியல் கட்சிகளை கூட தொடங்கி உள்ளனர். அவ்வாறு மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் தொடங்கி தலைவர்களாக மாறிய தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்களாம்.

அரசியல் கட்சிகளை தொடங்கிய நடிகர்கள் (Actors Political Party)

சினிமாவில் அறிமுகம் ஆகி அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர்கள் பற்றியும் அவர்கள் தமிழக அரசியலில் எந்த வகையில் பணியாற்றினர் மற்றும் அவர்களின் அரசியல்கட்சி பெயர் மற்றும் அரசியல் பயணம் பற்றியும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

எம்.ஜி.ஆர் (M.G. Ramachandran)

சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் திமுக கட்சி சார்பில் அரசியலில் ஈடுப்பட்டு வந்தார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி புதிய கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார் அந்த கட்சியின் பெயர் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும்.

அதன் பிறகு இந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மாற்றப்பட்டது. இந்த கட்சியை தொடங்கிய பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்.ஜ.ஆர் (M.G.R). உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதலமைச்சராக இருக்கும் போது மரணமடைந்தார்.

M.G. Ramachandran

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதிமுக -வின் முதலமைச்சராக பதசி ஏற்றார். இவரும் சினிமா துறையில் இருந்தவர் தான். இவர் எம்.ஜி.ஆர் -க்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா அவர்கள் 6 முறை தமிழகததின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். உடல்நலக் குறைபாடு காரணமாக J. Jayalalithaa 2016 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருக்கும் போது மரணமடைந்தார்.

AIADMK Amma

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan)

சினிமா துறையில் எம்.ஜி.ஆர் -க்கு போட்டியாக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இவர் 1988 ஆம் ஆண்டு சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை ஆரம்பித்தார். ஆனால் சினிமா துறையில் இருந்த அளவிற்கு அவர் அரசியல் வாழ்க்கை அந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையவில்லை.

பாக்கியராஜ் (K. Bhagyaraj)

இயக்குனரும் நடிகருமான K. Bhagyaraj 1989 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி அரசியல் கட்சியை ஆரம்பித்தார். பாக்கியராஜ் -க்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பிரியம் கொண்டுள்ளார் எனவே அவர் அந்த கட்சியை தொடங்கினார்.

டி.ராஜேந்தர் (T. Rajendar)

இயக்குனர் டி. ராஜேந்தர் இவர் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடித்து உள்ளார். சினிமா துறையினரால் இவர் டி. ஆ. என அழைக்கப்படுகிறார். 1991 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி கழகம் ஆரம்பித்தார். அதன் பிறகு அந்த கட்சியின் பெயர் லட்சிய திமுக என பெயர் மறாற்றம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் (Vijayakanth)

தமிழ் சினிமா துறையில் கப்டன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியை தொடங்கினார். இவருக்கு மக்களிடையே இருந்த ஆதரவு காரணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தார். உடல்நலக் குறைபாடு காரணமாக 28.12.2023 அன்று மரணமடைந்தார் Vijayakanth.

Vijayakanth
மேலும் படிக்க: Constitution of India in Tamil: இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய தகவல்கள்..!

சரத்குமார் (R. Sarathkumar)

தமிழ் சினமா துறையில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். இவர் 2007 ஆம் ஆண்டு அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

R. Sarathkumar

கருணாஸ் (Karunas)

தமிழ் சினிமாவில் காமடி நடிகராக இருந்தவர் தான் கருணாஸ் (Karunas). இவர் சில படங்களில் பால்களும் பாடி உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு அதிமுக கட்சியுடன் கூட்டணியில் திருவாடானை தொகுதியில் வெள்ளி பெற்றார்.

கார்த்திக் (Karthik)

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக் (Karthik). இவர் 2009 ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார் எனவே 2018 ஆம் ஆண்டு மனித உரிமை காக்கும் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

கமல்ஹாசன் (Kamal Haasan)

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமா துறையில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் உலக நாயகன் என ரசிகர்களால் மற்றும் திரை கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். கமல்ஹாசன் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனார் Kamal Haasan வெற்றி பெற வில்லை.

Kamal

விஜய் (Vijay)

அவர்களை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள ஒரு முன்னணி நடிகரும் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவர் தான் நடிகர் விஜய். இவர் இந்த வருடன் (2024) பிப்ரவரி 02 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். Vijay வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

Actor Vijay
மேலும் படிக்க: President Name List of India: இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular