செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் திரையரங்கில் நேரலையில் பார்க்கலாம்..!

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி (Ayothi Ramar Temple Opening Date) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு திரையரங்குகளில் நேரலையில் ஒளிபரப்ப உள்ளதாக PVR நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் சில மாநிலங்களில் கும்பாபிஷேக நிகழ்வை நேரலை செய்ய மக்கள் கோரிக்கை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளதாக PVR INOX திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவில் உள்ள 70 க்கும் மேற்பட்ட நகரங்களில், 160 க்கம் அதிகமான திரையரங்ககளிர் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22 ஆம் தேதி (Ramar Kovil Opening Date) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவினை நேரலையில் திரையரங்குகளில் பார்க்க விரும்புபவர்கள் இதற்காக டிக்கெட்டுகள் PVR INOX ஆப் அல்லது இணையதளம் மற்றும் பிற தளங்களில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரலாற்று நிகழ்வை காண ஆர்வமுள்ள பார்வைகாளர்களுக்கு ஒரு பாப்கார்ன் மற்றும் ட்ரிங்க் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து குறித்து PVR INOX நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா கூறியது என்னவென்றால், இது போன்ற மகத்தான மாற்றம் வரலாற்று நிகழ்வுகளை சமமான பிரமாண்டமான முறையில் பார்க்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள பக்தர்களை இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுடன் இணைப்பது எங்களுக்கு பாக்கியம் உள்ளது. சினிமா அனுபவத்தை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பு பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது. மேலும் இந்த வரலாற்று தருணத்தை எங்கள் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று கூறினார்.

மேலும் படிக்க: ராமர் கோயில் திறப்பு விழா..! பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago