குறுகிய காலத்தில் தன்னுடைய சிறந்த படங்களால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகிறது. தொடர் வெற்றி படங்கள் காரணமாக பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார்.
மேலும் தற்போது ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை லோகேஷ் செய்து வருகிறார். இதற்கு மத்தியில் நடிகை ஸ்ருதிஹாசம் நடிக்கும் ஒரு ஆல்பத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்த ஆல்பத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த ஆல்பத்திற்கு இனிமேல் என்று பெயர் (Lokesh Shruti Haasan Album Name) வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த இனிமேல் பாடலின் டீசர் (Inimel Album Song Teaser) வெளியாகியுள்ளது.
இந்த ஆல்பத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த டீசர் இந்த ஆல்பத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பாடலின் டீசரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் இனிமேல் ஆல்பத்தின் மீதான எதிர்ப்பார்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: லோகேஷ் ஸ்ருதிஹாசன்: இது என்ன புது டிவிஸ்டா இருக்கு..! |