Homeசினிமாரஜினி படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்..! இத்தனை கோடியா?

ரஜினி படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்..! இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் பல இயக்குனர்கள் இருந்தாலும் தனது முதல் படத்திலேயே மக்களை கவரும் இயக்குனர்கள் சிலர் தான். அந்த வரிசையில் தான் சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்களை கவர்ந்தவர் தான் இவர்.

அந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை அவர் இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு கமலுடன் விக்ரம், மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். தொடர் வெற்றிப்படங்கள் காரணமாக மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்கி (Coolie Movie Director) வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெயர் படத்தின் டீசரோடு (22.04.2024) அன்று வெளியானது.

Coolie Movie Director

இந்நிலையில் தான் தற்போது இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் (Lokesh Kanagaraj Salary For Coolie Movie) வெளியாகியுள்ளது.

அதன் படி ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்திற்கு சம்பளமாக லோகேஷ் கனகராஜ் ரூ. 60 கோடி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular