Homeசினிமாதயாரிப்பாளராக மாறிய மாஸ் இயக்குனர்..! படத்தின் ஹீரோவாக லாரன்ஸ்..! வேற லெவல் காம்போ..!

தயாரிப்பாளராக மாறிய மாஸ் இயக்குனர்..! படத்தின் ஹீரோவாக லாரன்ஸ்..! வேற லெவல் காம்போ..!

தமிழ் திரையுலகில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் தான் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வெற்றிப்படமாக தான் அமைந்தது. இந்நிலையில் தான் தற்போது தனது அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

அந்த வரிசையில் தான் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் (Raghava Lawrence Next Movie Producer) வெளியாகியுள்ளது. இதன் படி இப்படத்தினை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளார். இதுவரை இயக்குனராக வலம் வந்த லோகேஷ் உறியடி படத்தின் கதாநாயகனாக விஜயகுமார் நடித்த பைட் கிளப் என்னும் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார்.

இவர் தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ திரைப்படமும் மக்கள் மத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நல்ல வசூலையே குவித்தது என்று தான் கூறவேண்டும். கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.

இந்நிலையில் தான் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்த தகவலானது வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் இவர் தயாரிக்கும் இரண்டாவது படம் ஆகும். மேலும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள (Lokesh Kanagaraj Raghava Lawrence Combo) இப்படத்திற்கு பென்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: களவாணி படத்தில் நடித்த விமலின் தங்கையா இவர்.. அடையாளமே தொியாமல் மாறி போன விமல் தங்கை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular