பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காமெடி நடிகர் சேஷு (Lollu Sabha Seshu RIP). அவர் இன்று (26.03.2024) காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த மாத தொடக்கத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேஷு உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரை துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு பிரபல தொழைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் சேஷு.
குறிப்பாக சந்தானம் படங்களில் நடித்து வந்தார். சந்தானம் தனது பல படங்களில் அவருடன் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த சேஷு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வந்தார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் சேஷு (Lollu Sabha Seshu)நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து தன் உடல்மொழியால் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்து தன் திறமையை அனைவருக்கும் காட்டினார். மார்ச் 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு வயது 60. இந்நிலையில் இன்று (26.03.2024) உடல்நல குறைபாடு காரணமாக மரணம் அடைந்தார் சேஷூ (Lollu Sabha Seshu Passed Away). இவரின் மறைவு திரைத்துறையினர் மற்றும் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசு பள்ளிகளுக்கு 15 லட்சம் நிதியுதவி அளித்த பாலா..! |