HomeசினிமாLover Movie Box Office Collection: இரண்டு நாளில் இத்தனை கோடியா?

Lover Movie Box Office Collection: இரண்டு நாளில் இத்தனை கோடியா?

சினிமா உலகைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்து அதிகபட்சமாக அதிக அளவிலான வசூலை பெறும் தான் என்பது தான் உண்மை. ஆனால் சில வருடங்களாக அறிமுக நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் நல்ல வசூல் மற்றும் நல்ல விமர்சனங்களைப் பெறுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில வருடங்களில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களைக் கூறலாம். இந்நிலையில் கடந்த (9.02.2024) அன்று நடிகர் மணிகண்டன் அவர்களின் நடிப்பில் லவ்வர் என்னும் படம் வெளியானது. இப்படத்தினை அறிமுக இயக்குநரான பிரபு ராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் மணிகண்டன் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கு பிடித்த விதத்தில் உள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இவர் புதிதாக நடித்துள்ள லவ்வர் திரைப்படம் வெளியானது.

இவர் இதற்கு முன்பு நடித்த ஜெய்பீம் மற்றும் குட் நைட் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் (Lover Movie Vasool) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்ததை போலவே இந்த திரைப்படம் நல்ல வசூலுடன் தான் தனது வசூலை தொடங்கியுள்ளது.

லவ்வர் திரைப்படத்தின் வசூல் (Lover Movie Box Office Collection)

இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி முதல் நாளில் செய்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலின்படி இந்த திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் ஒரு கோடி என கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தோடு இந்த திரைப்படம் வெளியானது தான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

எனினும் இந்த திரைப்படம் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருப்பதாலும், மேலும் இந்த படத்திற்கு காதலர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் வருவதால் வரும் நாட்களில் இப்படம் நல்ல வசூலை அள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 2.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Lover Movie Vasool
இதையும் படியுங்கள்: Marakkuma Nenjam Movie Review: 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப்பருவத்தை கண்முன்னே நிறுத்திய படம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular