HomeசினிமாLover OTT Release: லவ்வர் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Lover OTT Release: லவ்வர் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் லவ்வர். இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

இந்த படத்தை இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீகௌரி பிரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் இந்த காலத்தில் உள்ள காதலை பற்றி கூறும் படமாக இருந்தது இதன் காரணமாக இளம் தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் தான் தற்போது இந்த லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் (Lover Movie OTT Release) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால் சில மாதங்களாகவே தமிழ் படங்கள் எதுவும் ஓடிடியில் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதே போல தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான லால் சலாம் படமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது.

Lover Movie OTT Release

இந்நிலையில் தான் தற்போது லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தகவல் (Lover Movie OTT Release Date) வெளியாகியுள்ளது. இந்த லவ்வர் படமானது மார்ச் 27-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் குறைவான தொகைக்கு தான் அந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி லவ்வர் திரைப்படம் (Lover Tamil Movie) வரும் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள்: தனுஷ் பட நடிகையுடன் இணையும் துருவ் விக்ரம்..! வெளியான முக்கிய அப்டேட்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular