Homeபொது தகவல்கள்ஹீமோகுளோபின் குறைவா? இந்த உணவுகளை சாப்பிடுங்க – 4 வாரத்துலேயே மாற்றம் தெரியும்!

ஹீமோகுளோபின் குறைவா? இந்த உணவுகளை சாப்பிடுங்க – 4 வாரத்துலேயே மாற்றம் தெரியும்!

சிறிது நேரம் நடக்கலனா சோர்வா? மூச்சு திணறுதா? கையில் காலில் மரத்துண்ட மாதிரி உணருதா? கூடவே பலவீனமும் கூட வந்துருக்கா? இவை எல்லாமே ஹீமோகுளோபின் குறைவின் அறிகுறிகள் இருக்கலாம்.

ஹீமோகுளோபின் என்னன்னா, நம்ம ரத்தத்துல இருக்கும் சிவப்பு அணுக்கள் உடனான ஒரு முக்கிய புரதம். இதுதான் நம்ம நுரையீரல்களில் இருந்து ஆக்ஸிஜனை எல்லா உடல் உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்றது. இதுல அளவு குறஞ்சா, உடம்பே சரியாக வேலை செய்ய முடியாமா போயிடும்.

ஹீமோகுளோபின் குறைவுக்கு காரணம் என்ன?

மாதவிடாய் அதிகமாக வருவது
உடலுக்குள்ள இரத்தக்கசியல்
சரியான உணவுப்பழக்கம் இல்லாமை
விட்டமின் B12, ஃபோலிக் ஆசிட் குறைபாடு
தலாசீமியா, ஸிக்கிள் செல் அனீமியா மாதிரியான ரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகள்
டைபாய்டு, டீ.பி., மூட்டு வாதம் போன்ற நீண்டநாள் நோய்கள்
கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் இரும்பு தேவைப்படும், அதை உணவிலிருந்து பெற முடியாத நிலை

ஹீமோகுளோபினை உயர்க்க வேண்டுமா? சாப்பிட வேண்டிய உணவுகள்:

காய்கறி & தாவர அடிப்படையிலான உணவுகள்:

  • தட்டைப்பயறு, காராமணி, பட்டாணி
  • கீரைகள் (முருங்கை, பசலை, தண்டுக்கீரை, ப்ரோக்கோலி)
  • சுண்டல் வகைகள்
  • உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம்
  • வெள்ளரிக்காய் விதை

மாமிச உணவுகள்:

  • ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி
  • மீன், நாட்டுக்கோழி
  • இறால், நண்டு மாதிரியான கடல்நீர் உணவுகள்

இவை எல்லாம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள். தினமும் எடுத்துக்கொண்டு 4 முதல் 6 வாரம் கடைபிடிச்சா, ஹீமோகுளோபின் ரெசல்ட் சர்ருனு மேல வர ஆரம்பிச்சுரும்!

எச்சரிக்கை: டீ, காஃபி, புகைபிடித்தல், மது போன்றவற்றை தவிருங்க – இது இரும்பின் உறிஞ்சலை பாதிக்கும். கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நீண்டநாள் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டே சாப்பாடு திட்டம் பண்ணுங்க.

முக்கிய குறிப்பு: ஹீமோகுளோபின் குறைவு ஏதோ சோம்பல்னு எடுத்துக்காதீங்க. மருந்து மட்டும் இல்ல, உணவோடே சரிசெய்ய முடியும். ஆனால் உங்கள் உடல்நிலை ஏற்கெனவே மோசமா இருந்தா, தயவுசெய்து மருத்துவரை சந்திச்சு சோதனை செய்து ஆலோசனைப்படி சாப்பிடுங்க.

RELATED ARTICLES

Most Popular