நம்ம தமிழ்சினிமாவுக்கு புதிதாக கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் சூரி, தற்போது “மாமன்” படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார். இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம், என் ஊர் மயிலாடுதுறையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாமா–மருமகன் பாசத்தின் அழகான சித்திரம்
இந்த படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை நம்மை ஒரு மாமா மற்றும் 6 வயது சிறுவன் இடையிலான அன்புப் பிணைப்புக்குள் அழைத்துச் செல்கிறது. சூரி ஒரு உணர்வுள்ள கதாபாத்திரத்தில், மிகச் சுருக்கமாகவும் இயற்கையாகவும் நடித்துள்ளார் என்பதே பலரின் ஒருமித்த கருத்து.
ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
- “குடும்பம் கண்ணில் ஒளியும் மனசில் நிம்மதியும் கொடுக்கும், அப்படியொரு உணர்ச்சி படம்!”
- “இது பெண்களுக்கு மட்டும் கிடையாது, மாமா, மருமகன், அத்தை, மாமி எல்லாரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படைப்பு”
- “பாடல்களும், பி.ஜி.எம்-மும் (background score) மிக நன்றாக இருக்கு… எல்லாம் சேர்ந்து ஒரு வலிமையான பைண்டிங்”
படத்திலிருக்கும் உண்மைத் தொன்மை படத்தின் கதை எதாவது பெரிய ட்விஸ்ட், ஆக்ஷன் அல்ல…ஆனால் நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் நெஞ்சோடு தொட்டுக் கூறும் கதையாக இது இருக்கிறது சின்ன வயதுப் பிள்ளை முகத்தில் சிரிப்புடன் மாமாவிடம் ஏங்கும் நம்பிக்கை, மாமாவின் பதில் இல்லாத அமைதி. இதெல்லாம் ஒருசிலருக்கு கண்ணீரை அழைக்கச் செய்யும் அளவுக்கு உணர்ச்சிக்கரமானது.