ஆன்மிகம்

Macha Sastram Tamil: அதிர்ஷ்டம் தரும் மச்ச பலன்கள்..!

Macha Sastram Tamil: நமது ஜோதிட சாஸ்திரத்தில் மச்சம் பலன்கள் அதாவது மச்சம் சாஸ்திரம் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். சிலருக்கு ஆடம்பரமான வாழ்க்கை அமைந்துவிட்டாலோ அல்லது உயர் பதவி கிடைத்துவிட்டாலோ ஒரு சிலர் அவனுக்கென்ன அவன் மச்சக்காரன் என்று கூறுவார்கள். பொறாமையில் கூறினாலும் அது உண்மை தான். ஒருவருடைய உடம்பில் இருக்கும் மச்சத்தை வைத்து அவரின் குணாதிசயங்கள் மற்றும் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணித்துவிடலாம். நமது ஜோதிட சாஸ்திரத்தில் மச்ச சாஸ்திரத்தை சாமுத்திரி சாஸ்திரம் என்று கூறுவார்கள். இது நமது ஆயக்கலை 64-ல் உள்ள அங்க லட்சண சாஸ்திரத்தில் ஒன்று தான்.

நாம் இந்த பதிவில் ஆண்கள் (Macham Palangal For Male in Tamil) மற்றும் பெண்களுக்கு (Macha Palangal for Female in tamil) பொதுவான மச்ச பலன்களை பார்க்கலாம்.

Table of Contents

மச்சம் என்றால் என்ன?Macha Sastram Tamil

ஒருவர் அவர் பிறப்பிலிருந்தோ அல்லது பிறந்த பிறகு அவர்களின் தோல் மீது உருவாக கூடிய புள்ளிகள் தான் மச்சம். இது இயற்கையாகவே நமது உடலில் நிகழக்கூடிய ஒன்று. இந்த மச்சம் (Macha palangal in tamil) அளவில் சிறியதாகவும், பெரியதாகவும், கருப்பு, சிவப்பு, பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரபடி மச்சம் பலன்கள்

கிரகணங்களின் அடிப்படியில் தான் இந்த மச்சங்கள் (Macha Sastram For Female In Tamil) ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே மச்சமும் (Macha Sastram For Male In Tamil) உருவாகிறது. ஒருவருடைய வாழ்வில் மச்சம் அங்க அடையாளமாக மாறிவிடுகிறது. ஜோதிடர்கள் ஒருவருடைய கிரகண அடிப்படையில் தோன்றி உள்ள மச்சங்களை வைத்து அவர்களின் வாழ்வில் எந்த நிலைக்கு செல்வார்கள், அவர்களின் பிறப்பு குணாதிசயங்கள் ஆகியவற்றை கணித்து கூறிவிடுவார்கள். மச்சங்கள் (Macha Sastram Tamil) உடம்பில் எங்கு இருந்தால் என்ன பலன் என்று தற்போது காண்போம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • பெண்களுக்கு (Lucky moles on female body) குங்குமம் வைக்கும் இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உயர்ந்த பதவியில் அதிகாரமிக்க பதவியில் அமருவார்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் அல்லது அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் கணவான அமைவார்கள்.
  • ஆண்களுக்கு வலது புறம் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் தனலாபம் கிடைக்கும்.
  • பெண்களுக்கு வலது புறம் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இதுவே இடதுபுறத்தில் இருந்தால் அவர்கள் கோபக்காரர்களாகவும், குணங்கள் சற்று மாறுப்பட்டதாக இருக்கும்.

புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்

  • ஆண்களுக்கு வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமான மனைவி அமைவார்கள். இடது புருவத்தில் மச்சம் இருந்தால் பணக்கஷ்டம், இறக்கங்கள் நிறைந்த வாழக்கை அமையும். புருவத்தின் நடுவில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • பெண்களுக்கு வலது புருவத்தில் மச்சம் (lucky Moles In Woman) இருந்தால் திருண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இடது புருவத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பயந்த குணாதிசயங்கள் கொண்டவராக இருப்பார்கள்.

கண்களில் மச்சம் இருந்தால் என்னபலன்கள்

  • ஆண்களுக்கு வலது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்களின் நண்பர்களால் இவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வலது கண்களில் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் பெயர், புகழ் கிடைக்கும். இடது கண்களின் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும்.
  • பெண்களுக்கு வலது, இடது எந்த கண்களில் மச்சம் இருந்தாலும் வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு மூக்கின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வில் எல்லா வசதிகளையும் பெறுவார்கள். வலது மூக்கில் மச்சம் இருந்தால் அவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இடது மூக்கில் மச்சம் இருந்தால் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள்.
  • பெண்களுக்கு மூக்கின் மீது மச்சம் இருந்தால் அதனை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கை அமையும். அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

காது பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு வலது பக்க காதில் மச்சம் இருந்தால் அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் போன்றவற்றில் கவனம் தேவை. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய கண்டங்கள் வர வாய்ப்புள்ளது. இடது காதில் மச்சம் இருந்தால் நல்ல பேச்சுத்திறமை, மற்றவர்களை ஈர்க்க கூடிய குணங்களை கொண்டவராக இருப்பார்கள்.
  • பெண்களுக்கு எந்த காதில் மச்சம் இருந்தாலும் அவர்கள் நல்ல செலவு செய்யும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

உதட்டின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • பெண்களுக்கு உதட்டின் மீது மச்சம் இருந்தால் அவர்கள் செல்வந்தார்களாக இருப்பார்கள். மற்றவர்களை ஈர்க்க கூடியவராக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவராக இருப்பார்கள். நல்லொழுக்கம் உடையவராக இருப்பார்கள்.
  • ஆண்களுக்கு உதட்டின் மீது மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் அலட்சியம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • பெண்களுக்கு இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் மற்றவர்களை எளிதாக வசீகரிக்க கூடியவராக இருப்பார்கள். இவர்கள் நினைத்த காரியங்கள் எளிமையாக வெற்றி அடையும். வலது கன்னத்தில் (mole on right cheek female) மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் வாழக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் இரக்க குணம் கொண்டவராக இருப்பார்கள். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம் இறக்கங்கள் நிறைந்ததாக காணப்படும்.

கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு வலது கழுத்தில் மச்சம் இருந்தால் சொத்து, பணம் சேரும். அதுவே இடது கழுத்தில் மச்சம் இருந்தால் பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படும்.
  • பெண்களுக்கு இடது கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். யாருக்கும் பயபடமாட்டார்கள். வலது கழுத்தில் மச்சம் இருந்தால் பிள்ளைகளால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

நாக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ரசனை மிகுந்தவர்களாக இருப்பார்கள். நாக்கில் மச்சம் உள்ளவர்கள் அறிஞர்கள், விஞ்ஞானத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • பெண்களுக்கு வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் பொறுமையாக இருப்பார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் மிகுந்த அன்பு காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். இரக்க குணம் கொண்டவராக திகழ்வார்கள். இடது இடுப்பில் மச்சம் இருந்தால் கடுமையாக உழைக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள்

வயிற்றில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு வயிற்றில் மச்சம் இருந்தால் அவர்கள் பொறாமை குணம் கொண்டவராக இருப்பார்கள். அடி வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல அதிர்ஷ்டமான வாழ்வு அமையும்.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம். அவர்கள் அனைத்திலும் திறமையாக திகழ்வார்கள். நீதித்துறை போன்ற பதவிகளில் இருப்பார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
  • பெண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் இனிமையான குடும்ப வாழ்க்கை அமையும்.

பாதத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்

  • ஆண்களுக்கு வலது பாதத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்வார்கள். இடது பாதத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் நினைத்தது போல இல்லாமல், சற்று இறக்கங்களுடன் தான் இருக்கும்.
  • பெண்களுக்கு இடது பாதத்தில் (mole on left leg female) மச்சம் இருந்தால் அவர்கள் புத்தி கூர்மையாகவும், திறமையானவளாகவும் இருப்பார்கள். வலது பாதத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள்.
மேலும் படிக்க: Kanavu Palangal in Tamil: நம் கனவில் இவைகள் வந்தால் என்ன பலன்கள் தெரியுமா?

FAQS

1. பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்?

நெற்றியில் குங்கும் வைக்கும் இடத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு அதிகார பதவியில் அமருவார்கள்.

2. மச்சம் எங்கே இருந்தால் நல்லது?

மூக்கின் மீது மச்சம் உள்ளவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

3. விரலில் மச்சம் இருந்தால் என்ன?

கட்டை விரலில் மச்சம் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மோதிர விரலில் மச்சம் உள்ளவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்.

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago