தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகளில ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் (Cook With Comali Season 5) பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. எனினும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பதிலாக நடுவராக யார் வரப்போகிறார் என்ற ஆர்வமும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இது குறித்த தகவல் (Cook With Comali New Judge) வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுடைய ப்ரோமோஷூட் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக (CWC New Judge) வரவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு நடிகர் மற்றும் சமையல் கலைஞரும் ஆவார். இவருடைய சமையல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞர் மாறிவிட்டார். அவரது சமையலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது சமையலை பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் சாப்பிட்டு இவரை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது இவர் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி (Cook With Comali) நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக்கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குக் வித் கோமாளி மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: மைதா மாவில் பிளீச்சிங் பவுடர் சேர்க்கப்படுகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்..! |