Madurai Chithirai Thiruvizha: தமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்திரை மாதம் (Madurai Meenakshi Amman Temple Chithirai Festival 2024) தொடங்கிவிட்டாலே திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் இன்று (ஏப்ரல்12) தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர்.
கொடியேற்றம் தொடங்கி அம்மன் பல்வேறு வாகனங்களில் நான்குமாசி வீதிகளை காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman Chithirai Thiruvizha 2024) பட்டாபிஷேகம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். மறுநாள் 20-ம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ம் தேதி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை (kallalagar Thiruvila 2024) வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், மறுநாள் ஏப்ரல் 23 தேதி அதிகாலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை காண்பதற்கு வைகை ஆற்றின் கரைகளில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
மேலும் படிக்க: Rasi Palan 2024: தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்..! இனி எல்லாம் நன்மை தான்..! |