Homeசமையல் குறிப்புகள்மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா..! சூப்பர் டேஸ்ட்ல இனி வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா..! சூப்பர் டேஸ்ட்ல இனி வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

இன்றை காலகட்டத்தை பொருத்த வரையில் பல புதிய பாணங்கள் வந்துவிட்டது. அனால் எத்தனை புதிய பாணங்கள் வந்தாலும் இந்த ஜிகர்தண்டாவிற்கு உள்ள மவுசே தனி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் பானமாகவும் இது உள்ளது. இந்த ஜிகர்தண்டா அனைத்து ஊர்களிலும் கிடைத்தாலும் இதற்கு பிரபலமான இடம் என்றால் அது மதுரை தான். அங்கு விற்கப்படும் ஜிகர்தண்டா தனி சுவையில் இருக்கும். எனவே மதுரை செல்பவர்கள் இந்த பானத்தை பருகாமல் வருவதே இல்லை என்று தான் கூறவேண்டும். நாம் இப்பதிவில் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி (How to Make Madurai Special Jigarthanda In Tamil) என்பது பற்றி பார்க்கலாம்.

ஜிகர்தண்டா செய்வது எப்படி (How to Make Jigarthanda )

தேவையான பொருட்கள்

  • பால் – 1/2 லிட்டர்
  • சர்க்கரை – 1/2 கப்
  • பாதாம் பிசின்- 2
  • நன்னாரி சர்பத்- 1 ஸ்பூன்
  • ஐஸ் கிரீம்- 2 ஸ்பூன்

ஜிகர்தண்டா செய்முறை (Madurai Special Jigarthanda Recipe In Tamil)

  • ஜிகர்தண்டா செய்வதற்கு முதலில் பாதாம் பிசினை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளவும். கலையில் இது நன்றாக ஊறி இருக்கும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் கால் கப் சர்க்கரை சேர்த்து அதனை கேரமல் பதம் வரும்வரை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் பால் சேர்த்து நன்கு பால் கோவா போல் சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
  • இதனைத்தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இது நன்றாக கொதித்ததும் அதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர் அந்த கலவையில் கேரமலில் பாதி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் மீதமுள்ள கேரமலை ஐஸ்கிரீமில் சேர்த்து அதனை கலந்து பின்னர் பிரிட்ஜில் வைக்கவும்.
  • இப்போது ஜிகர்தண்டாவை ஏற்பாடு செய்ய தொடங்கலாம். ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அந்த கப்பில் முதலில் பாதாம் பிசினை சேர்க்கவும், அதன் பின்னர் நன்னாரி சர்பத் அதற்கு மேல் பால் கோவா பின்னர் செய்துவைத்துள்ள பால் இறுதியாக ஐஸ் கிரீம் சேர்த்து குடித்தால் சுவையான ஜிகர்தண்டா தயார்.
Madurai Special Jigarthanda Seivathu Eppadi

நாம் இப்பதிவில் இந்த வெயில் காலத்திற்கு இதமான மதுரை ஸ்பெஷல் ஜிகிர்தண்டா செய்வது எப்படி (Madurai Special Jigarthanda Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம்.

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா..! சூப்பர் டேஸ்ட்ல இனி வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

நாம் இப்பதிவில் இந்த வெயில் காலத்திற்கு இதமான மதுரை ஸ்பெஷல் ஜிகிர்தண்டா செய்வது எப்படி என்பது பற்றி பார்க்க உள்ளோம்.

Type: Dessert

Cuisine: Tamil Nadu

Keywords: Jigarthanda, Madurai Special Jigarthanda Recipe

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Milk – 1/2 litre
  • Sugar – 1/2 cup
  • Almond resin- 2
  • Nannari sorbet- 1 spoon
  • Ice cream- 2 spoons

Recipe Instructions: ஜிகர்தண்டா செய்வதற்கு முதலில் பாதாம் பிசினை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளவும். கலையில் இது நன்றாக ஊறி இருக்கும். இப்போது ஒரு பாத்திரத்தில் கால் கப் சர்க்கரை சேர்த்து அதனை கேரமல் பதம் வரும்வரை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் பால் சேர்த்து நன்கு பால் கோவா போல் சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். இதனைத்தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இது நன்றாக கொதித்ததும் அதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர் அந்த கலவையில் கேரமலில் பாதி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர் மீதமுள்ள கேரமலை ஐஸ்கிரீமில் சேர்த்து அதனை கலந்து பின்னர் பிரிட்ஜில் வைக்கவும். இப்போது ஜிகர்தண்டாவை ஏற்பாடு செய்ய தொடங்கலாம். ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அந்த கப்பில் முதலில் பாதாம் பிசினை சேர்க்கவும், அதன் பின்னர் நன்னாரி சர்பத் அதற்கு மேல் பால் கோவா பின்னர் செய்துவைத்துள்ள பால் இறுதியாக ஐஸ் கிரீம் சேர்த்து குடித்தால் சுவையான ஜிகர்தண்டா தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: சுவையான குலு குலு பாதாம் பால் செய்வது எப்படி..! ஈஸியா செய்யலாம் வாங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular