Homeசெய்திகள்பள்ளி மாணவர்களுக்காக புதிய இணையதளம்..! ஆன்லைனிலேயே படிக்கலாம்..!

பள்ளி மாணவர்களுக்காக புதிய இணையதளம்..! ஆன்லைனிலேயே படிக்கலாம்..!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வசதிக்காகவும் பலவிதமான சலுகைகளை அறிமுகப்படுத்தி தான் வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆதார் திருத்தம் பதிவு செய்யும் முகாம்கள் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் (23.02.2024) தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த அறிவிப்பில் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு புதிய இணையதளம் (New website for students) ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதற்கு மணற்கேணி என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த செயலியானது தற்போது புதிய வடிவம் எடுத்து உள்ளது. இதன் மூலம் மணற்கேணி செயலியில் இனி காணொலிப் பாடங்கள் ஆகியவற்றை கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.

இந்த திட்டமானது தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்லவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மணற்கேணி என்னும் செயலி அறிமுக்கப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த செயலி மூலம் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்களும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டுக் காட்டி நடத்தி வந்தனர். ஆனால் இனி பாடங்களை இணையதளம் வாயிலாக நடத்தலாம். மேலும் இந்த இணையதளம் (website for students) மூலம் பாடங்களை காட்சி ரீதியாக நடத்துவதால் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கும் எனவே மாணவர்களுக்கு கற்றல் மிகவும் எளிதாகும்.

Manarkeni App

இந்த மணற்கேணி செயலி (Manarkeni App) உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். மேலும் இதனை இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பதால் தொலைபேசி வாயிலாகவும் கணினி வாயிலாகவும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்து தேர்வை நல்ல முறையில் எதிர்க்கொள்வர். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: GMAIL இனி வேலை செய்யாதா? அதிர்ச்சியில் மக்கள்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular