Homeசினிமாமணிகண்டனின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்..! சூப்பர் போங்க..!

மணிகண்டனின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்..! சூப்பர் போங்க..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் நடிகர் மட்டுமின்றி வசனம் எழுதுதல், கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு நல்ல நடிகர் என்பதையும் இவரது படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின்னர் பீட்சா 2 படத்திற்கு முதன் முதலாக கதையெழுதினார். இதன் மூலம் இவர் திரையுலகில் கதை ஆசிரியராகவும் அறிமுகமானார். பின்னர் இவர் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

அதன் பிறகு 2017-ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம் வேதா. இந்த திரைப்படத்திற்கு இவர் சிறந்த முறையில் வசனம் எழுதியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு இவர் விருதும் பெற்றார். இவர் பல படங்களில் துணை காதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தான் இவர் சூர்யா கதாநாயகனாக நடித்த ஜெய்பீம் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் தான் இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இவரின் எதார்த்தமான கதாபாத்திரம் மக்களை கவர்ந்தது. இந்த குட் நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்னும் படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியானது. மேலும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்த லவ்வர் படம் வசூலிலும் நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Manikandan Next Movie Directer

இந்நிலையில் தான் தற்போது இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் (Manikandan Next Movie Update) வெளியாகியுள்ளது. இந்த தகவலில் இவரின் அடுத்தப்படத்திற்கான இயக்குனர் பற்றிய அப்டேட் (Manikandan Next Movie Director) தான் வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக இயக்குனர் பா. ரஞ்சித் (Pa. Ranjith) இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த அப்டேட் இவரது ரசிகர்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Siren Movie Review in Tamil: உணர்வுபூர்வமான கதைக்களத்தில் சைரம்..! படம் எப்படி இருக்கு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular