சமீப காலங்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூல் செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த வரிசையில் நாம் பல படங்களை கூறலாம். அந்த வரிசையில் தான் தற்போது ஒரு படம் இணைந்துள்ளது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை செய்துள்ள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ்.
இந்த படம் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். எனினும் தற்போது தமிழகத்திலும் வசூலை குவித்து வருகிறது. இந்த படமானது இதற்கு முன் உண்மையாகவே நடந்த ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இப்படத்தினை இயக்குனர் சிதம்பம் இயக்கியுள்ளார். இப்படத்தில் 1991-ம் ஆண்டு வெளியான குணா படத்தை இணைத்து இயக்கியுள்ளார் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இப்படத்தினை தமிழ் திரையுலகின் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பார்த்துவிட்டு இப்படத்தின் இயக்குனரை பாராட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், உதயநிதி போன்ற தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இப்படம் பலர் மனதை கவர்ந்து உள்ளது என்று தான் கூறவேண்டும்.
இந்த நிலையில் தான் தற்போது இப்படத்தின் வசூல் (Manjummel Boys Box Office Collection in Tamil) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வசூலை (Manjummel Boys Vasool) பார்த்து பலரும் வாயடைத்து விட்டனர் என்று தான் கூறவேண்டும். மேலும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமன்றி தமிழகத்தில் மட்டும் ரூபாய் 15 கோடி வரை இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில், மலையாள மொழியில் வெளிவந்து, அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் செய்துள்ளது.
இந்த திரைப்படம் (Manjummel Boys Movie) அனைவருக்கும் பிடித்த விதத்தில் அனைத்து தலைமுறையினருக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளது. எனவே இப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது. இப்படத்தின் வசூல் 100 கோடிக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதையும் படியுங்கள்: அபிராமி அபிராமி..! ரீ ரிலீஸ் ஆகவுள்ள குணா திரைப்படம்..! |