Homeசினிமாமனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… Manjummel Boys OTT Release Date...

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… Manjummel Boys OTT Release Date அறிவிப்பு..!

இந்த வருடம் மலையாள சினிமா துறையின் வெளியாகும் ஒவ்வொரு படமும் மக்கள் மத்தில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. திரைக்கு வரும் மலையாள படங்கள் 50 கோடி, 100 கோடி, 200 கோடி என வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. அந்த அளவிற்கு மக்களாவல் மலையாள படங்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன.

சமீப காலங்களாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்கள் கூட அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிக அறிவில் வசூல் பெற்று வெற்றி படங்களாக மாறி வருகின்றன. மலையாளத்தில் இந்த ஆண்டு வெளிவந்த மோகன்லால் படமான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் ஆகும்.

இந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்த பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ்(Manjummel Boys), பிரமயுகம், வருஷ்டகளுகடகு சேஷம், ஆடு ஜீவிதம், ஆவாகம் போன்ற படங்கள் மக்கள் மனதை கவர்ந்து தொடர்ச்சியாக வெற்றி படங்களாக மாறி வருகிறது. இந்த படங்களில் பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் திரையரங்குகளை தாண்டி ஓடிடியில் வெளியாகி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படமும் ஓடிடியில் (Manjummel Boys OTT Release Date) வெளியாக உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாகவும் மாறியுள்ளது. இதுவரை திரையரங்குகளில் இந்த படம் 230 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

OTT Release Date for Manjummel Boys

இந்த படத்தை ஆரம்பத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெறும் 10 கோடிக்கு மட்டுமே வாங்குவோம் என படக்குழுவினரிடம் கூறியுள்ளது. எனவே படக்குழுவினர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இடம் விற்று உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக (Manjummel Boys in OTT) உள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Manjummel Boys Box Office Collection: படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் செய்த திரைப்படம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular