தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் அன்புடன் தல என அழைப்பார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா. இந்த படம் மீண்டும் திரைக்கு வருவதாக அதாவது ரீ-ரிலீஸ் ஆகப்போவதாக (Mankatha Movie Re-Release) தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா (Mankatha Movie). சென்னை 28, கோவா போன்ற மசாலா படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக மங்காத்தா திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படம் அஜித்தின் 50 வது படம் ஆகும்.
மங்காத்தா படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா ஜெரெமையா, அஞ்சலி, வைபவ் ரெட்டி, பிரேம்கி அமரன், அஷ்வின் காக்குமானு, மஹத் ராகவேந்திரா, வி. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் முன் வந்த பழைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த ரீ-ரிலீஸ் படங்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமால் இதுவரை பாபா, ஆளவந்தான், வாரணம் ஆயிரம் ஆகிய 3 படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த கில்லி படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த ரீ-ரிலீஸ் படங்கள் வரிசையில் அடுத்ததாக இடம் பிடிக்க போகும் படம் மங்காத்தா (Ajith Movie Re-Release) ஆகும். இந்த படம் அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக (Mankatha Movie Re-Release Date) தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: ரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி… |