18 வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நேற்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் நேற்று ஆர்வத்துடன் இந்த மக்களவைத் தேர்தலில் தங்களை ஆளும் தலைவரை தேர்ந்தெடுப்பதற்றாக வாக்களித்துள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர்கள் போன்ற அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்கள் போன்ற பிரபலங்களும் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். நேற்று பல இடங்களில் சுமுகமாக தேர்தல் நடைபெற்றாலும், ஒரு சில இடங்களில் மோதல்கள், தேர்தல் புறக்கணிப்புகள் போன்றவை நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் (Vellore Thoguthi Vetpalar) போட்டியிடுபவர் மன்சூர் அலிகான். அவர் பலாப்பழம் சின்னத்தில் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று (20.04.2024) அவர் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் போட்டியிடும் பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் படுவதால் மன்சூர் அலிகான் கோபமடைந்தார்.
வாக்குச் சாவடியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இயந்திரத்தில் உள்ள பிரதான வேட்பாளர்களின் சின்னங்கள் நன்றாக தெரிகிறது. ஆனால் இரண்டாவது பெட்டியில் உள்ள சின்னங்கள் மீது வெளிச்சம் படவில்லை.
வாக்களிக்க வரும் மக்கள் ஒன்று, இரண்டு என்று உள்ள சின்னங்களை பார்த்து வாக்கு குத்தி விட்டு சென்று விடுவார்கள். இரண்டாவது இயந்திரம் மீது வெளிச்சம் பட வில்லை லைட்டுகளை அடைத்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த 2 வது பெட்டியில் உள்ள சின்னங்களை தெரியவில்லை. வாக்களிக்கும் இயந்திரத்தில் இருப்பது பூசணிக்காயா அல்லது பலாப்பழமா என்று கூட தெரியவில்லை.
இது குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்டால், 2வது பெட்டி பக்கத்தில் வி.வி.பேட் இருக்கிறது. அதன் மீது ரைட் படக் கூடாது என்று கூறுகிறார்கள். வி.வி.பேட் மீது லைட் படக்கூடாது என்றால் அப்புறம் என்ன வெங்காயத்துக்கு இந்த மெஷுன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். பேப்பரில் ஓட்டு போட்டிருக்கலாமே? ஆயிரத்தெட்டு மெஷின்கள் எதற்கு? என மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan) தேர்தல் அலுவலர்களிடம் கோபத்தில் பேசிவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டார்.
மேலும் படிக்க: நம்ம ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படும் எம்.பி க்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..! |