இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan) மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவரிடம் கடதம் கொடுத்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் 18 வது மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்று முடைந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவியது. மேலும் பல வேட்பாளர்கள் சுயச்சையாக போட்டியிட்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் (Vellore Thoguthi Vetpalar) பலாப்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான்.
இவர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக அவர் தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்ததாகவும் தற்போது மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
18 வது மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால் முன்பே காங்கிரஸ் கட்சியல் இணைய முடியாது. எனவேதான் தற்போது தேர்தல் முடிந்த பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.