HomeசினிமாMarakkuma Nenjam Movie Review: 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப்பருவத்தை கண்முன்னே நிறுத்திய படம்..!

Marakkuma Nenjam Movie Review: 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப்பருவத்தை கண்முன்னே நிறுத்திய படம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் நல்ல வசூல் மற்றும் நல்ல விமர்சனங்களை பெறுவது வழக்கம் தான். ஆனால் சில வருடங்களாக குறைந்த பட்ஜெட்டில் புதுமுகங்கள் மற்றும் பெரிய அளவில் திரையுலகில் பிரபலம் இல்லாத ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலையும் பெறுகிறது இந்த வரிசையில் தான் சில மாதங்களுக்கு முன் ஜோ எனும் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அதேபோல் தான் மறக்குமா நெஞ்சம் என்னும் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொப்பளாரான ரக்‌ஷன் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தை இரா.கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் மெலினா, தீனா, ராகுல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று இந்த திரைபடமானது திரையரங்குகளில் வெளியானது. எனவே தற்போது இந்த படத்தில் கதை களம் எப்படி உள்ளது. மேலும் இப்படத்தின் விமர்சனத்தை (Marakkuma Nenjam Movie Review) இப்பதிவில் பார்க்கலாம்.

கதையின் கரு

இப்படத்தின் கதை பள்ளி பருவத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும் இப்படத்தின் கதாநாயகனாக ரக்‌ஷன், கதாநாயகி பிரியதர்ஷினியை பள்ளி பருவம் முதலே ஒருதலையாக காதலித்து வருகிறார். ஆனால் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் பள்ளி படிப்பு முடியும் வரையிலும் தன் காதலை பிரியதர்ஷினியிடம் சொல்லாமலே போய் விடுகிறார் ரக்‌ஷன்.

இந்த பள்ளி கதையானது 2008-ம் ஆண்டு முடிவடைவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கதையானது 10 வருடங்களை கடந்து செல்கிறது. பள்ளி முடித்த பத்து வருடங்கள் கழித்து அப்பள்ளயில் படித்த அனைவரும் மீண்டும் அதே பள்ளியில் ஒரு முக்கியமான காரணத்திற்காக ரியூனியன் ஆகிறார்கள். இந்நிலையில் இந்த ரியூனியனிலாவது தனது காதலை கதாநாயகியான பிரியதர்ஷினியிடம் கூறவேண்டும் என்று நினைக்கிறார். எனவே அவர் தன் காதலை பிரியதர்ஷினியிடம் கூறினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

படம் பற்றிய கருத்துகள்

இப்படத்தின் கதைக்களம் பற்றி நாம் செல்லவே தேவையில்லை. பலருக்கும் பிடித்த வகையில் திரைக்கதை நன்றாகவே உள்ளது. ஆனால் இன்னும் புதிதாக எடுத்து இருக்கலாம் என்ற உணர்வும் பலரிடத்தில் உள்ளது. இதன் காரணமாக சற்று சரிவை கண்டுள்ளது.

இப்படத்தில் பல 90ஸ் கிட்ஸ் நினைவுகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை இன்னும் கொஞ்சம் கூட சுவாரஸ்யமாக காட்டியிருக்கலாம் என்று பலரும் கூறி வருகிறன்றனர்.

இப்படத்தின் முக்கிய அதிக அளவிலான விமர்சனங்களை பெற்றது என்றால் அது கதாபாத்திரங்கள் தேர்வு தான். இந்த படத்தில் கதாபாத்திரங்களின் நடிகர்கள் யாரும் அந்த அளவில் பொருந்தவில்லை என்றே கூறவேண்டும்.

Marakkuma Nenjam Movie
இதையும் படியுங்கள்: Ayalaan Box Office Collection: வசூலில் பட்டைய கிளப்பும் அயலான்..!

பள்ளியில் நடக்கும் சேட்டைகள், சண்டைகள், காதல் ஆகியவை அழகாக கதை களம் ஆனால் அது மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்ட படக்குழுவினர் தவறிவிட்டனர். எனினும் இப்படத்தை பார்க்கும் போது மீண்டும் பள்ளி நினைவுகளை தூண்டி நமக்குள் ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது இந்த மறக்குமா நெஞ்சம்.

இப்படம் புதிய கதைகளம் போல் இல்லை. இதற்கு முன்னர் பார்த்த கதையை தான் படமாக்கியிருப்பது போல் உள்ளது. சற்று புதுவிதமாக இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கலாம்.

மேலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் நடிப்பும் இன்னும் கொஞ்சம் தத்ரூபமாக இருந்திருந்தால் படம் பார்க்க மிகவும் நன்றாக இருந்து இருக்கும்.

இயக்குநர்: ரா.கோ.யோகேந்திரன்

ஒளிப்பதிவாளர்: கோபி துரைசாமி

இசையமைப்பாளர்: Sachin Warrier

தயாரிப்பாளர்கள்: Raghu Yelluru, Ramesh Panchagnula, Janardhan Chowdary, Raako Yoagandran

இப்பதிவில் நாம் மறக்குமா நெஞ்சம் படத்தின் திரை விமர்சனத்தை பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Marakkuma Nenjam

Director: RK Yogandran

Date Created: 2024-02-02 10:00

Editor's Rating:
4
இதையும் படியுங்கள்: Ayalaan Movie Review in Tamil..!அயலான் திரைப்படத்தின் விமர்சனம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular