Homeசெய்திகள்அனைத்து நிறுவன மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு..! வெளியான மகிழ்ச்சி தகவல்..!

அனைத்து நிறுவன மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு..! வெளியான மகிழ்ச்சி தகவல்..!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை தொடர்ந்து அறிமுக்கப்படுத்தி தான் வருகிறது. அதிலும் இன்னும் சில நாட்களில் தேர்தல் வரவிருப்பதால் பல புதிய திட்டங்கள் மற்றும் இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த திட்டங்களை விரிவுப்படுத்துதல் என பல நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் நடைமுறையில் உள்ள திட்டம் தான் இந்த பேறுகால விடுப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல பெண்கள் பயணடைந்து வந்தனர். இந்த காலத்தில் தொன்னூறு சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு செல்கின்றனர். எனவே அவர்களின் மகப்பேறு காலத்தின் போது ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக தான் இந்த மகப்பேறு விடுப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த பேறுகால விடுப்பு திட்டத்தில் (Pregnancy Leave) மூலம் பல பெண்கள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் படி தமிழக அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுப்பின் கால அளவு 180 நாட்கள் முதல் 270 நாட்கள் அதாவது 6 மாதங்கள் (Maternity Leave in Months) வரை ஆகும்.

இந்த நிலையில் தான் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது.

Perukala Viduppu

அதன்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிறுவன மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு (Perukala Viduppu) கட்டாயம் வழங்கப்படும் (Maternity Leave For All Womens) என தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிறுவன மகளிருக்கும் பேறுகால விடுப்பு கட்டாயம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: H5N1 Virus: கொரோனாவை விட 100 மடங்கு அதிகமாக பாதிக்கும் புதிய வைரஸ்..! அதிர்ச்சியில் மக்கள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular