ரசிகர்களின் பெரும் ஆதரவோடு ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 22-வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இதுவரை இந்த சீசனில் எதிர் கொண்ட போட்டிகளில் தோல்வியை சந்திக்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இன்று போட்டி (Today CSK vs KKR Match) நடைபெறவுள்ளது.
இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத கொல்கத்தா அணியை சென்னை அணி எதிர்க்கொள்வதால் இந்த CSK vs KKR Match மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த போட்டி இன்று (08.04.2024) நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் ரசிகர்களால் கூறப்பட்டது. இவற்றில் முக்கியமான காரணம் என்றால் சென்னை அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பத்திரானா அணியில் இடம் பெறாதது தான்.
மேலும் இறுதியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முஸ்தபிசுர் இடம்பெறவில்லை. இது கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறபட்டது. இந்நிலையில் தான் இன்று நடைபெறவுள்ள (Today CSK Match) போட்டியில் பத்திரனா (Matheesha Pathirana) மற்றும் முஸ்தபிசுர் (Mustafizur Rahman) அகிய இருவரும் களமிறங்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் எற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பது பற்றி பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: தோனியின் பல வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி..! |