Homeசெய்திகள்ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடை இல்லையா..! மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூட உத்தரவு…

ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடை இல்லையா..! மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூட உத்தரவு…

வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி (Mahavir Jayanti) நாடு முழுவதும் உள்ள ஜெயின் கோவில்களில் கொண்டாடப்பட்டது. சமண மதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீர் ஜெயந்தி. இந்த பண்டிகை காரணமாக சென்னையில் உள்ள இறைச்சி கடைகளை (Meat Shop was Closed) மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சமண சமயத்தில் 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். இவதே இறுதி தீர்ததங்கரும் ஆவார். இவரின் பிறந்தநாளை தான் மகாவீர் ஜெயந்தி (Mahavir Jayanti) விழா என்று கொண்டாடப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைதர மாதத்தில் உள்ள திரியோதசி திதி அன்று தான் மகாவீரரின் பிறந்த நாள் என கூறப்படுகிறது. அன்றைய தினம் சமணர்களால் மகாவீர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் மகாவீர் ஜெயந்தி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயின் கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் எனவும் (Order to Close Meat Shop) உத்தரவிடப்பட்டுள்ளது.

Mahavir Jayanti Date

ஏப்ரல் 21 ஆம் தேதி (Mahavir Jayanti in 2024) அன்று சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவிற்கு இறைச்சி கடை வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Lok Sabha Election 2024: மக்களே 2 நாள் விடுமுறை இப்பவே போய் வாங்கி வச்சுக்கோங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular