கோடை காலம் தொடங்கிவிட்டது இன்னும் சில வாரங்களில் குழந்தைகளுக்கும் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கிவிடும். இந்த விடுமுறையை கழிக்க இப்போது முதலே பலரும் திட்டம் போட தொடங்கி இருப்பர். பலரும் இந்த கோடைக்காலத்தில் கொஞ்சம் குளிராகவும், வெயில் அதிகம் தெரியாமல் இருக்க வேண்டும் என்று என்னுவது வழக்கம் தான். இதற்கு ஏற்ற ஒரு இடம் தான் தமிழகத்தில் உள்ள கீரிப்பாறை. இதனை தமிழகத்தின் மினி ஊட்டி (Mini Ooty In Tamil Nadu) என்று அழைக்கின்றனர்.
இந்த கீரிப்பாறை மலைப்பகுதி கன்னியாகுமரியில் தான் உள்ளது. கன்னியாகுமரியின் பிரபலத்தை பற்றி நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் தெரியும் அங்கு முக்கடல் சங்கமித்துள்ள அழகை பார்ப்பதற்கும் காலையில் உதயம் ஆகும் சூரியன் மற்றும் மாலையில் அழகாக அஸ்தமனம் ஆகும் நிகழ்வையும் பாரக்க பல இடங்களில் இருந்தும் பல மக்கள் வருகின்றனர். இப்போது அந்த கன்னியாகுரி பகுதியில் உள்ள கீரிப்பறை பற்றி தான் பார்க்கவுள்ளோம்.
இந்த கீரிப்பாறை பகுதியானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த இடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த அழகிய பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் முழுவதும் இயற்கை, பசுமை என கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் தான் இருக்கும், மேலும் இங்கு அழகிய பசுமையான வயல்வெளிகள், ரப்பர் மரங்கள் என முழுவதும் இயற்கையால் இந்த இடம் நிறைந்து காணப்படும்.
இந்த மலை பகுதியில் மலையேற்றம் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இங்கு உள்ள பெருஞ்சாணி அணையிலிருந்து மலையேற்றம் செய்ய வாடகைக் கார்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். இந்த பகுதியில் உள்ள மலைச் சரிவுகளில் இருந்து நீர் விழுந்து வரும் இடம் காளிகேசம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த காளிகேசம் ஆற்றின் மேல் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. எனவே அதற்கு மேல் மக்களால் செல்ல முடியாது.
இந்த கீரிப்பாறை (Mini Ooty Keeriparai) காட்டில் பல வியப்பூட்டும் விஷயங்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் சுமார் 500 வருடங்கள் பழமையான மரம். எனவே இதனை நிச்சயம் பார்த்து தான் வரவேண்டும். இந்த மரத்திற்கு தொல்காப்பியம் எனும் இலக்கண நூலை எழுதிய தொல்காப்பியர் நினைவாக தொல்காப்பியர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி இன்னும் பல வியப்பூட்டும் விஷயங்கள் இந்த பகுதியில் உள்ளது. இங்கு மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகள் என நிறைய பகுதிகள் உள்ளன. இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் வட்டப்பாறை எனும் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானது. ஆனால் இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பாக இருக்கவேண்டும். பாதுகாப்பது துறையினரும் எப்போதும் பணியில ஈடுப்பட்டு இருப்பர். இவ்வாறாக இயற்கையை விரும்புபவர்களுக்கு இந்த இடம் பொக்கிஷமாக தான் இருக்கும்.
இதையும் படியுங்கள்: தளபதி 69 படத்திற்கு விஜய்யின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க..! |