செய்திகள்

MLA Arul: மாணவர்களின் காலில் விழுந்த எம்எல்ஏ..! காரணம் இதுதானா?

சேலத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக எம்எல்ஏ அருள் அவர்கள் மாணவ-மாணவிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏ அருள் பங்கேற்றார். அப்போது திமுக நிர்வாகிகள் சிலர் எம்எல்ஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் கொடுக்க விடாமலும், அவரை பேச விடாமலும் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக மற்றும் பாமக ஆகிய இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திமுக மற்றும் பாமகவினருக்கு இடையே மோதல் வலுத்தது.

இதன் காரணமாக பாமக எம்எல்ஏ அருள் அவர்கள் மாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர் சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவரது தொகுதிக்குட்பட்ட பகுதியான பாகல்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்: அரங்கத்தின் உள்ளே இவளோ வசதி இருக்கா?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago