தற்போது மணிதர்களின் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் செல்போனும் சேர்ந்துள்ளது. இந்த போன் உலகில் நடைபெரும் அனைத்து நிகழ்வுகனையும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்கும் வகையில் இருப்பதால் மக்கள் இதனை பயன்படுத்த பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த செல்போனை சார்ஜ் செய்யும் போது சில நேரங்களில் சூடாகிறது. சிலரின் போன் சூடாகி வெடித்து விடுகிறது. இது போன்று போன் சுடுவதற்கு காரணம் என்ன? அதை சரி செய்வது எப்படி போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் (Mobile Heating Problem) பதில் தருகிறது இந்த பதிவு.
பொருவாக போனை சார்ஜ் செய்யும் போது லேசாக சூடாவது இயல்பானது ஆகும். ஆனால் சில போன்கள் சார்ஜ் செய்யும் போது அதிகமாக சூடாக இருக்கும். அவ்வாறு சூடாக இருந்தால் அது போனில் உள்ள பெரிய பிரச்சனைக்கான அறிகுறியாக கூட இருக்கும். இதற்கான காரணங்கள் என்ன என்று தற்போது பார்க்கலாம்.
போன் சூடாக காரணங்கள் (Mobile Heating Problem)
- உங்கள் மொமைலில் நீங்கள் திரைப்படம் பார்க்கும் போது அல்லது ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தும் போது அல்லது கேம் விளையாடும் போதோ போன் சூடானால் உங்கள் செல்போனில் மல்டி டாஸ்கிங் (Multi-tasking) செய்வதற்கு ஏற்ற போன் இல்லை. எனவே ஒரே நேரத்தில் உங்கள் போனை சூடாக்கும் படியான செயல்களை செய்ய வேண்டாம்.
- உங்கள் போனில் ஸ்டோரேஜ் (Storage) அதிகமாக இருந்தால் உங்கள் போன் சூடாக வாய்ப்புள்ளது. எனவே உங்கள் போனில் அதிக அளவிளான ஸ்டோரேஜ் வைத்துக் கொள்ள வேண்டாம்.
- போன் முழுவதுமாக சார்ஜ் (Mobile Charging 100%) ஆன பிறகும் தொடர்ச்சியாக போனை சார்ஜ் செய்து கொண்டிருப்பதும் செல்போன் சூடாக ஒரு காரணம் ஆகும்.
- செல்போன் பேட்டரி சார்ஜ் (Mobile Charger) செய்ய மூன்றாம் தரப்பு சார்ஜரை அல்லது கேபிளைப் பயன்படுத்தினால் போன் சேதப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணங்களால் கூட போன் சூடாக வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்கள் போனின் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- உங்கள் செல்போனை யாராவது ஹேக் (Hack) செய்திருந்தால் கூட போன் அளவுக்கு அதிகமான சூடாக வாய்ப்புகள் உள்ளது. எனவே இணையம் பயன்படுத்தும் போது உங்கள் போன் சூடானால் இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடும்.
இது போன்ற பிரச்சனைகளால் உங்கள் போன் சூடாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்றார். தொழில்நுட்ப உதவியை கொடுப்பவரிடம் உங்கள் மொபைலை கொடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் போன் வெடிப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிக்க: கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்… |
FAQ
1. போன் சார்ஜர் (Charger) என்பதன் தமிழ் பெயர் என்ன?
போன் சார்ஜரின் தமிழ் பெயர் மின்னூக்கி என்பதாகும்.
2. புளூடூத் (Bluetooth) என்பதன் தமிழ் பெயர் என்ன?
புளூடூத் என்பதன் தமிழ் பெயர் ஊடலை என்பதாகும்.