Homeசெய்திகள்தேர்தல் எதிரொலி... அம்மா உணவகங்களை போல் விரைவில் தொடங்க உள்ள மோடி உணவகங்கள்..!

தேர்தல் எதிரொலி… அம்மா உணவகங்களை போல் விரைவில் தொடங்க உள்ள மோடி உணவகங்கள்..!

மக்களவை தேர்தல் (Lok Sabha Election) இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது, எனவே பல அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மேலும் இந்த தேர்தல் காரணமாக பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், இதற்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களை விரிவுபடுத்துவது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் அம்மா உணவகங்கள் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் மூலம் பல மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு குறைந்த விலையில் உணவுகள் சுவையாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த உணவகங்கள் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இந்த உணவகங்கள் அதிமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்டவை ஆகும்.

அதன் பிறகு பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இப்போது அம்மா உணவங்களை போல ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் (Modi Unavagangal) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் (Tamilisai Soundararajan) தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை அதாவது ஏப்ரல் 17-ம் தேதி மாலை முதல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது இந்த அறிவிப்பை தமிழிசை வெளியிட்டுள்ளார். இதோடு சேர்த்து பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Tamilisai Soundararajan Election Promise
  • அம்மா உணவகங்களை போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
  • மீனவ கிராம பெண்களின் நலன் கருதி மீனவ அக்கா குழுக்கள் அமைக்கப்படும் என வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
  • வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும்.
  • வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
  • சோழிங்கநல்லூரில் பெரிய அளவிலான ESI மருத்துவமனை உருவாக்கப்படும்.
  • கோதாவரி நீரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: இலவச சமையல் சிலிண்டர் குறித்த அறிவிப்பு வெளியானது..! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular