Homeவிளையாட்டுIPL 2024: ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய வீரர்..! காரணம் என்ன?

IPL 2024: ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய வீரர்..! காரணம் என்ன?

இந்திய அளவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய போட்டிகள் உள்ளது தான் ஐபிஎல் போட்டிகள். இந்த போட்டிகள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள விளையாட்டுகள் ஆகும். இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிகள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் உள்ளது. சமீபத்தில் கூட ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.இந்த ஆண்டில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளது. இந்நிலையில் தான் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது குறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

வரும் 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து பிரபல வீரரான முகமது ஷமி விலகுவதாக (Mohammad Shami withdraws from IPL) தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இந்த குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியானது 2022-ம் ஆண்டு அறிமுகமானது. அந்த ஆண்டே கோப்பையை ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி வென்றது.

அதுமட்டுமின்றி கடந்த வருடமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனினும் கோப்பையை சென்னை அணியிடம் இழந்தது. இந்நிலையில் தற்போது இந்த அணியில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இல்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு தான். இந்நிலையில் அணியின் முக்கிய வீரரான முகமது ஷமியும் விலகுவது இந்த அணிக்கு பேரிழப்பாக இருக்கும்.

Cricketer Mohammed Shami

முகமது ஷமி (Mohammed Shami) காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்கா செல்லவுள்ளார் இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: IPL 2024: எந்த தேதியில் தொடங்குகிறது? முதல் போட்டி யார் யார் மோதுகின்றனர் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular