தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் தான் இவர் இறுதியாக நடித்த அயலான் படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வெற்றிக்கு பிறகு தனது அடுத்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படம் ராணுவ வீரர் ஒருவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பபட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் (SK23 Update) வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த SK23 Movie படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மோகன்லால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் தற்போது திடீரென இப்படத்திலிருந்து மோகன்லால் விலகியுள்ளார். அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இருந்து மோகன்லால் விலகியதால் அவருக்கு பதிலாக சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படியுங்கள்: Ghilli Movie Re Release: 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில்..! தேதியை அறிவித்த படக்குழு..! |