சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது இப்போது இயல்பாகிவிட்டது. அதிலும் விஜய் டிவி என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு முன்னர் கூட சில சீரியல்களில் நடித்த ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய ஜோடி இணைந்துள்ளது.
இயக்குனர் தாய் செல்வம் இயக்கிய சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியலில் ரவீனா தாஹா, ஷெரின், சல்மான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒளிப்பரப்பப்பட்டது. இது இதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட மௌனராகம் சீரியல் இரண்டாம் பாகம் ஆகும். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த சீரியல் அகும்.
இந்த சீரியல் கடந்த 2023-ம் வருடம் நிறைவடைந்தது. இந்த சீரியல் முடிந்த கையேடு ரவீனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். மேலும் இப்போது டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் அடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது இந்த சிரியலில் நடித்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த மௌனராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற ஒரு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள். இதற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் மணமகன் – மணமகள் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இதையும் படியுங்கள்: யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. ஆணின் வலியை உணர்த்தும் அழகான வரிகள்..! |