உலக அளவில் கோடிகணக்கில் ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள தனிநபர் என்றால் அது இந்திய கிரிக்கெட் வீரர் MS Dhoni தான். இவர் உலக அளவில் மிகவும் பிரபலமான நபராகவும் உள்ளார். இவர் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர் சென்னை அணியில் விளையாடுவது தான்.
வருடா வருடம் ஐபிஎல் (IPL) போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய அளவில் இந்த போட்டிகளுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த போட்டிகள் இவ்வளவு பிரபலமாக இருக்க பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அணிகளில் விளையாடும் வீரர்கள் தான். மக்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் விளையாட்டை பார்ப்பதற்காகவே இந்த தொடரை பார்க்கின்றனர்.
இதில் முக்கியமான வீரர் என்றால் நம் நினைவிற்கு வருபவர் தல என மக்களால் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி தான். இவருக்கு உள்ள ரசிகர் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனினும் இவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட சம்பளமாக (CSK Dhoni salary) எத்தனை கோடி வங்குகிறார் என்ற கேள்வி பலரிடம் இருக்கும்.
நாம் இப்பதிவில் தோனி அவர்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாட எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்று பாரக்கலாம். தோனி அவர்கள் சிஎஸ்கே அணியில் இணைந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 16 வருடத்தில் இவருடைய சம்பளம் (MS Dhoni salary in CSK) குறித்த விவாதமானது தொடர்ந்து நடைபெற்ற தான் வருகிறது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் CSK அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவரது சம்பளம் (Dhoni salary in CSK) குறித்த பார்க்கலாம்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தோனியின் சம்பளம் 6 கோடி ஆகும். மேலும் அதன் பிறகு 2011 முதல் 2013 வரை இவர் 8.28 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதன் பிறகு 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 12.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதற்கு பின்னர் 2021 வரையான காலத்தில் இவர் 15 கோடி பெற்றுள்ளார். ஆனால் தற்போது இவர் ஒரு சீசனுக்கு ரூபாய் 12 கோடியை சம்பளமாக பெற்று வருகிறார்.
2008-2010 | 6 கோடி |
2011-2013 | 8.28 கோடி |
2014-2017 | 12.5 கோடி |
2018-2021 | 15 கோடி |
2021-2023 | 12 கோடி |
இதையும் படியுங்கள்: Pro Kabaddi 2024: பிளே ஆஃப் சுற்றில் தமிழ் தலைவாஸ் இடம் பெறுவார்களா..! |