IPL என்று அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அனைத்து அணிகளும் தங்களது சிறந்த விளையாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் நேற்று (14.04.2024) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. வழக்கம் போல இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக தான் இருந்து. அதற்று ஏற்றார்போல தான் இந்த போட்டியும் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பீள்டிங்கை தேர்வு செய்தது.
இதன் காரணமாக சென்னை அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது, எனவே இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதுவே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார் என தகவல் (MS Dhoni New Record) வெளியாகியுள்ளது. அதன் படி ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை எம்.எஸ் தோனி பெற்றுள்ளார்.
தற்போது 42 வயதான தோனிக்கு முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே. அதோடு விளையாடிவரும் தோனி இந்த அளவிற்கு அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தகவல் (MS Dhoni Record in IPL) தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்: தோனியின் பல வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி..! |