உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் தான் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார். இவருக்கு இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் உள்ளது. இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி எப்போதும் தனது தகுதிக்கு ஏற்றார்போல ஆடம்பரமாக வாழ்பவர் ஆவார்.
அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்ற அளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை தான் நடித்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் முன்பான கொண்டாட்டங்கள் வெகுவிமர்சயையாக நடைபெற்றது. இந்த நிலையில் முகேஷ் அம்பானி ரூ. 240 கோடி மதிப்புடைய விமானத்தை ஒரு முக்கிய நபருக்கு பரிசளித்துள்ளார் என்று தகவல் (Mukesh Ambani Flight Gift For Nita Ambani) வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி தமது மனைவியான நீடா அம்பானியின் (Nita Ambani) 44-வது பிறந்தநாளுக்கு ரூ. 240 கோடி மதிப்புடைய Airbus A319 ரக விமானத்தை பரிசாக அளித்துள்ளார். இந்த விமானத்தில் அலுவலக அறை, பொழுபோக்கு அம்சங்கள், படுக்கை அறை என பல வசதிகள் செய்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல தான் கடந்த தீபாவளி பண்டிகையின் போது முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தமது மனைவிக்கு Rolls-Royce Cullinan Black Badge காரை பரிசளித்தார். இந்த காரின் விலை ரூ. 10 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இவர் அளிக்கும் ஆடம்பர பரிசுகள் எதுவும் அவரது சொத்துக்களை குறிப்பிடுபவை அல்ல. இவை முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினர் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவே செய்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: புதிய சாதனை படைத்த இஷா அம்பானி..! மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி..! |