Homeஆன்மிகம்Arupadai Veedu: அறுபடை வீடு கொண்ட திருமுருகா...

Arupadai Veedu: அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

Arupadai Veedu கொண்ட ஆறுமுகன் பற்றியும். அறுபடை வீடு பற்றியும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். தமிழ் கடவுளான முருகன் அழிக்கும் கடவுள் சிவன் மற்றும் தேவி பார்வதியின் இளைய புதல்வன் என இதிகாவசங்கள் கூறுகின்றன.

சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றி கண்ணின் ஒளி சுடரில் உருவானவர் முருகன் சூரபத்மனை அளிப்பதற்காக அவதாரம் எடுத்தவர். சிவன் நெற்றிக் கண்ணில் உருவான சுடரின் அளிப்பதற்காக நரகாசுரன் அம்பை எய்தான் ஆனால் ஆறு பாகங்களா உடைந்த அந்த சுடர் கங்கையில் விளுந்தது. அதன் பிறகு இந்த ஆறு சுடரும் ஆறு குழந்தைகளாக மாறின அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்தை பெண்களை வழர்த்தனர். கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் தான் முருகன் கார்த்திகேயன் என அழைக்கப்படுகிறார். அவர்களை போற்றும் வகையில் தான் கந்தை நினைத்து கார்த்திகை விரதம் இருக்கிறார்கள்.

ஆறு குழந்தைகளையும் வளர்த்து போர் கலைகளை கார்த்திகை பெண்கள் கற்று கொடுத்தனர். அதன் பிறகு தேவி பார்வதி ஆறு பாலகர்களையும் அரவணைத்தார் அதன் காரணமாக அனைவரும் ஒரே முறுகனாக மாறினர். அதன் பிறகு தாயார் பார்வதி முருகனுக்கு வேல் ஆயுதம் வழங்கினார். இந்த வேலை கொண்டு சூரபத்மனை (Surapadman) முருகன் வதம் செய்தார். இவ்வாறான முருகபெருமானின் தோற்றமும் அவரின் திருவிலையாடல் கதைகளை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பற்றியும் அறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

அறுபடை வீடு பட்டியல் (Arupadai Veedu list) – Arupadai Veedu in Tamil

அழகு என்றால் முருகன் தான். அந்த அளவிற்கு அழகாக இருக்கும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தனித்தனி சிறப்புகளை கொண்டது. முருகனின் திருவிளையாடல்கள், திருமணம், அறிவு மற்றும் போர் திறன் போன்றவற்றை பக்கதர்களுக்கு கூறும் வகையில் தான் இந்த அறுபடை வீடுகளும் அமைந்திருகின்றன (Murugan Arupadai Veedu List) என கூறப்படுகின்றன.

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணிகை
  • பழமுதிர்சோலை

இவை அனைத்தும் ஆறு முகனின் அறுபடை வீடுகள் பட்டியல் (Arupadai Veedu list) ஆகும். இவற்றை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் (Thiruparankundram)

முருகபெருமாளின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடானது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆகும். இந்த கோவிலின் கதை என்னவென்றால் முருகன் சூரனை வதம் செய்த புறகு தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

இங்க மலை வடிவில் சிவபெருமாள் அனைவருக்கும் அருள் தருகிறார். முருகபெருமான் அமர்ந்த கோலத்தில் மக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் தெய்வானை மணக்கொலத்தில் காட்சி தருகிறார்.

Arupadai Veedu in Tamil

திருச்செந்தூர் (Tiruchendur)

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாவது (Murugan Arupadai Veedu) படை வீடு ஆகும். இந்த திருச்செந்தூரில் கடற்கரையில் தான் முருகன் சூரபத்மனை வதம் செய்தார் என கந்த புறனம் செல்கிறது. எனவே இந்த கடற்கரை அருகிள் முருகன் கோவில் ரம்மியமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்து ஆறாம் நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடர்கரையில் முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெரும். அந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் கந்தனை நினைத்து விரதம் இருப்பார்கள்.

Arupadai Veedu list

பழனி (Palani)

திண்டுக்கள் மாவட்டத்தில் உள்ள பழனி அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு ஆகும். பழனி மலை சித்தர்கள் வாழ்ந்த இடம் என கூறுப்படுகிறது. இந்த பழனி கோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை உள்ளது.

ஞான மாம்பழத்திற்றாக முருகரும் பிள்ளையாரும் போட்டி போட்டனர். அந்த போட்டியில் தந்தை மற்றும்தாயாரை உலகம் என்று கூறி ஞான மாம்பழத்தை பிள்ளையார் பெற்றார். போட்டியில் தோற்றதால் கோபம் அடைந்த முருகன் கைலாய மலையில் இருந்து வெளியேறி பழனிமலையில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

பழனி மலையின் உச்சியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு போக 690 படிகட்டுகள் ஏறவேண்டும். அங்கு முருகப்பெருமான் மொட்டை அடித்து, கோவணம் கட்டி, ஒரு கையில் தடியை ஆயுதமாக கொண்ட தண்டாயுதபாணியாக மக்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Murugan Arupadai Veedu List

சுவாமிமலை (Swamimalai)

கும்பகோணத்தில் இருந்து 5 கிமீ தொலையில் உள்ள ஊர்தான் சுவாமிமலை. இது அறுபடை வீடுகளிள் நான்காம் படை வீடு ஆகும். இந்த கோவில் ஒரு செயர்க்கை மலை மீது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுவாமிமலை தான் தந்தைக்கு உபதேசம் செய்த மலை என கூறப்படுகிறது. முருகன் அவரின் தந்தையான சிவபெருமானுக்கு ஞானஉபதேசம் செய்தார் என கூறப்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தை பொருளை தந்தை சிவபெருமானிக்கு எடுத்துறைத்து உபதேசம் செய்தார் முருகன் இந்த நிகழ்வை எடுத்துறைக்கும் இடம் தான் சுவாமிமலை.

Arupadai Veedu in Tamil
இதையும் படியுங்கள்: Thaipusam 2024 in Tamil: தைப்பூசம் அன்று எந்த நேரத்தில் முருகனை வழிபட வேண்டும்..!

திருத்தணி (Tiruttani)

முருகபெருமானின் ஜந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். இந்த திருத்தணி சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல 365 படிகள் ஏறவேண்டும். இந்த படிகள் ஒரு வருடத்தை குறிக்கிறது. வள்ளி தேவியை இந்த கோவிலுக்கு அருகிள் தான் முருகன் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

தேவர்களை காக்க சூரனை வதம் செய்த முருகன் வள்ளியை மணந்து கொள்வதற்காக வேடர்களுடன் விளையாட்டாகப் போர் செய்தார். அப்போது அவர் கோபத்தைத் தணிப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தார். அந்த இடனம் திரு தணிகை மலை என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தலம் தான் திருத்தணி (Thiruttani) என அழைக்கப்படுகிறது.

Murugan Temple

பழமுதிர்சோலை (Pazhamudircholai)

அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை தான் ஆறாம் படை வீடு ஆகும். மதுரையில் இருந்து 60 கி.மீ தொலையில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் அவரின் மனைவியான தெய்வானை மற்றும் வள்ளி உடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

Murugan Arupadai Veedu

உலகில் வாழும் அனைவருக்கும் கல்வி அறிவுடன் இறையருள் என்ற மெய் ஞானமும் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என முருகன் சிறு பாலகன் வடிவில் இந்த கேட்ட தலம் பழமுதிர்சோலை.

இவை ஆறு இடங்களும் தான் முருக பெருமானின் அறுபடை வீடுகள் (Murugan Arupadai Veedu) ஆகும். இங்கிருந்து தான் முருகன் பக்கதர்களுக்கு அருள் பாளிக்கின்றார்.

மேலும் படிக்க: விளக்கு ஏற்றும் முறைகள்..! விளக்கு ஏற்றுவதால் வீட்டில் ஏற்படும் நன்மைகள்..! Deepam Etrum Murai..!

Arupadai Veedu – FAQ

1. குறிஞ்சி நில கடவுள் யார்?

குறிஞ்சி நில கடவுள் என அழைக்கப்படுபவர் முருகன் ஆவார்.

2. முருகனுக்கு உகந்த நாள் எது?

முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை ஆகும்.

3. முருகன் கொடியில் உள்ள சின்னம் எது?

முருகன் கொடியில் உள்ள சின்னம் சேவல் ஆகும். இதன் காரணமாக தமிழ் இலக்கியங்கள் முருகனை சேவற் கொடியோன் என்று குறிப்பிடுகின்றன.

4. முருகப்பெருமானின் வாகனம் எனது?

மயில் முருகப்பெருமானின் வாகனம் ஆகும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular