Homeசெய்திகள்நாக சைதன்யாவை காதலிக்கிறாரா? சோபியா துலிபாலா..!

நாக சைதன்யாவை காதலிக்கிறாரா? சோபியா துலிபாலா..!

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சோபிதா துலிபாலா. இவர் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு மனைவியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சோபிதா துலிபாலா ஆந்திராவை சேர்ந்தவர். இவர் மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அதே ஆண்டில் மிஸ் இந்தியா எர்த் என்ற பட்டத்தையும் வென்றார்.

இவர் முதலில் இந்தியில் அனுராக் காஷ்சோபித் யப் இயக்கிய ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பிறகு அமேசான் ப்ரைம் என்ற Madae in Heavn என்ற வெப் சீரிஸ் இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது. இந்தியல் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த குருப் திரைப்படம் பெறும் வெற்றி பெற்றது.

இன்ஸ்டாராமில் ஆக்டிவாக இருக்கும் இவரை தற்போது லட்சக்கணக்கானவர்கள் பாலோவ் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா (Naga Chaitanya) மற்றும் நடிகை சோபியா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சோபியாவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்கும் போது, எனக்கும் நாக சைதன்யாவிற்கும் இடையில் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே சற்று வதந்திகள் ஓய்ந்திருந்தது. ஆனால் தற்போது நாகசைதன்யா, மற்றும் சோபிதா கிசுகிசு (Naga Chaitanya Sobhita Dhulipala love)தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

சோபியா (Sobhita Dhulipala )தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதே போன்று நடிகர் நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்வியை இணையத்தில் எழுப்பி வருகிறார். இவர்களின் கிசுகிசு பேச்சு ஓய்ந்த நிலையில் தற்போது இவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் இவரின் காதலை உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular