வரலாறு

National Symbols of India: இந்திய தேசிய சின்னங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள்..!

இந்திய தேசிய சின்னங்கள் (National Symbols of India) என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ மற்றும் அடையாள சின்னங்களை குறிக்கின்றது. இந்த தேசிய சின்னங்கள் அனைத்தும் இந்தியாவின் அடையாளம், பாரம்பரியம் மற்றும் மரபுரிமைகள் தெரிவிக்கிறது.

இந்த தேசிய சின்னங்கள் என்பவை இந்தியாவின் குறியீடுகள் ஆகும். இவை இந்தியாவின் அடையாளம் மட்டுமின்றி இந்தியர்களின் தேச பக்கிதயை தூண்டுவதாகவும் இருகிறது. இந்தியர்கள் அனைவரும் இந்நதிய தேசிய சின்னங்கள் (India Desiya Chinnangal) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

நமது நாட்டின் பல வகையான தேசிய உயிரினங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளன. இந்திய நாட்டின் தேசிய கொடியானது 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சுதந்திரத்திற்கு முன்பாக ஏற்றுகொள்ளப்பட்டது. அதன் பிறகே தேசிய விலங்கு, பரவை, பழம், மரம் போன்ற பல சின்னங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றை பற்றி பாடபுத்தகங்களிலும் பல பொது தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நாம் இந்தியாவின் தேசிய சின்னங்கள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த பதிவில் National Symbols of India in Tamil பதிவிட்டுள்ளோம்.

National Symbols of India with Name

இந்திய தேசிய சின்னங்கள் தேசிய சின்னங்களின் பெயர்
தேசிய சின்னம்ஆசோக தூணில் இருந்து எடுக்கப்பட்ட ”சாரனாத்” சின்னம்
தேசிய கொடிஇந்திய நாட்டின் ”மூவர்ண கொடி”
தேசிய கீதம்”ஜன கண மன” பாடல்
தேசிய பாடல்”வந்தே மாதரம்” பாடல்
தேசிய விலங்கு”புலி” தேசிய விலங்கு
தேசிய நீர் விலங்கு”டால்பின்” தேசிய நீர் விலங்கு
தேசிய பறவை”மயில்” தேசிய பறவை
தேசிய மரம்”ஆலமரம்” தேசிய மரம்
தேசிய மலர்”தாமரை” தேசிய மலர்
தேசிய நதி”கங்கை” தேசிய நதி
தேசிய கனி”மாம்பழம்” தேசிய கனி
தேசிய விளையாட்டு”ஹாக்கி” தேசிய விளையாட்டு
தேசிய புத்தகம்”பகவத் கீதை” தேசிய புத்தகம்
தேசிய மலை ”நந்தா தேவி” தேசிய மலை
தேசிய புராதன விலங்கு”யானை” தேசிய புராதன விலங்கு
தேசிய ஊர்வன”இராஜ நாகம்” தேசிய ஊர்வன
தேசிய உறுதிமொழி”இந்தியா எனது தாய்நாடு” தேசிய உறுதிமொழி
தேசிய ரூபாய் குறியீடு”₹” தேசிய ரூபாய் குறியீடு

தேசிய சின்னம்

இந்தியாவின் தேசிய சின்னமாக (India Desiya Chinnam Ethu) ஆசோக தூணில் இருந்து எடுக்கப்பட்ட சாரநாத் சின்னம் ஆகும். இந்த சாரணாத் தேசிய சின்னமாக கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த சின்னம் நான்கு பக்கம் சிங்கம் உருவம் கொண்டது. இதன் கீல் பாதியில் அசோக சக்கரம், வலதுபக்கம் காளை மாடு மற்றும் இடது பக்கம் குதிரை உருவம் இருக்கும். காளை உருவமானது கடின உளைப்பையும், குதிரையின் உருவமானது ஆற்றல் மற்றும் திறனை குறிக்கிறது. இதன் பீடத்தின் கீழே ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் வாய்மையே வெல்லும் என்பதாகும்.

தேசிய சின்னமானது அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் போது பல வண்ணங்களில் ஆவணங்களில் இடம் பெருகின்றன. அமைச்சர்கள் பயன்படுத்தும் போது நீல நிறத்திலும், மக்களவை உருப்பினர்கள் பயன்படுத்தும் போது பச்சை நிறத்திலும், மாநிலங்களவை மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் போது சிவப்பு நிறத்திலும் இந்த தேசிய சின்னம் இருக்கும்.

தேசிய கொடி (National Flag of India)

இந்திய தேசிய கொடியின் வடிவமைப்பு கடந்த 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மூன்று வண்ணங்களை கொண்ட கொடி ஆகும். எனவே இது முவர்ன கொடி எனவும் அழைக்கப்படுகிறது.

இந்திய தேசியக் கொடியில் இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்கள் (National Flag Colour) உள்ளன. தேசிய கொடியின் நடுவில் நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என அழைக்கப்படும் சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஆகும்.

India National Flag பற்றிய சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன் படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். தேசிய கொடி எந்த அளவில் இருந்தாலும், அதன் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

தேசிய கீதம் (National Anthem)

1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ”ஜன கண மன” பாடல் இந்திய தேசிய கீதமாக (National Anthem of India) அங்கீகரிக்கப்பட்டது. 1911 டிசம்பர் 27 ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக இந்த பாடல் பாடப்பட்டது. இந்த பாடலை இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பாடினார். இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.

தேசிய பாடல்

பக்கின் சந்திரர் சாட்டர்ஜி என்ற வங்க எழுத்தாலர் சமஸ்கிரதத்தில் வந்தே பாரதம் என்ற பாடலை இயற்றினார். இந்த பாடலின் முதல் பத்தி சுதந்திர போராட்டத்திற்கு மக்களுக்கு உத்வேகம் கொடுத்தது. இந்த தேசிய பாடலுக்கு ”ஜன கண மன” பாடலுக்கு இணையான அந்தஸ்தை பெற்றுள்ளது.

தேசிய விலங்கு (National Animal of India)

1973 ஆம் ஆண்டு Tiger இந்தியாவின் தேசிய விலங்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. மாமிசம் உண்ணும் கம்பிரமும் உருவம் கொண்ட விலங்கான புலி தான் National Animal of India ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் இந்தியாவின் புலிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

காடுகளின் குறைவு மற்றும் வேட்டையாடுதல் அரச வங்காளப் புலிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றை அழிந்து வரும் உயிரினமாக மாற்றியுள்ளது. 2000 ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 3,642 ஆக இருந்தது. ஆனால் இப்போது 1,411 ஆக குறைந்துள்ளது. புலிகள் இயற்கையை பாதுகாப்பதற்காக சர்வதேச ஒன்றியத்தால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய பறவை (National Bird of India)

1963 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மயில் இந்தியாவின் தேசிய பறவையாக (India Desiya Paravai Ethu) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது துணைக்கண்டங்களில் காணப்படும் உள்நாட்டு பறவை ஆகும். தேசிய பறவையான மயிலுல் பெண் மயிலை விட ஆண் Peacock மிகவும் அழகாக இருக்கும். இந்த பறவை இந்தியாவில் காணப்படும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் கலாச்சாரங்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது.

மயில் ஆனது மிகவும் அழகான பறவை ஆகும். இதன் பருத்து நீண்டு இருக்கும். இதன் தோகை மிகவும் அழகாக இருக்கும். இந்த தோகை ஆண் மயிலுக்கு மட்டுமே இருக்கும், இதன் மார்பகம் மற்றும் கழுத்து பகுதி ஒளிரும் நிறத்தில் இருக்கும். மழை பெய்யும் போது ஆண் மயில் தோகை விரித்து ஆடும். அதோ போல் பெண் மயிலைக் கவர்வதற்காக ஆண் Peacock தோகை விரித்து ஆடும்.

தேசிய மரம்
(National Tree in India)

ஆலமரம் (Banyan Tree) இந்தியாவின் தேசிய மரம் ஆகும். இந்த ஆலமரத்தில் அதிக மருத்துவ குனம் உள்ளது. இந்த ஆலமரத்தின அறிவியல் பெயர் Ficus bengalensis ஆகும். இந்த ஆலமரத்தின கிளைகளில் இருந்து விழுதுகள் தொங்கும். அதன் பிறகு இந்த விழுதுகள் வேர் போல இந்த பரத்தினை தாங்கி பாதுகாக்கும். இந்த ஆலமரத்தின் வேர்கள் நீண்ட ஆயுளின் அடையாளமாக அங்கீகரிக்கப்படுகின்றன. இதனால் இந்த மரம் அழிவில்லாதது கருதப்படுகிறது. இதன் மூலம் India Desiya Maram Ethu என்பதை தெரிந்து கொண்டாம்.

தேசிய மலர் (National Flower of India)

1950 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய மலர் தாமரை (India Desiya Malar) அறிவிக்கப்பட்டது. இந்த தாமரை பூ புனிதமான பூவாக கருதப்படுகிறது. பண்டைய கால புராணங்களில் இந்த மலர் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Lotus மலர் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தான் வளரும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீரின் உயரத்திற்கு ஏற்றார் போல் இந்த தாவரத்தின் உயரம் மாறுபடும்.

தேசிய விளையாட்டு (National Sport of India)

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக உள்ளது. இந்திய ஹாக்கி விளையாட்டு போட்டியில் நுழைந்த போது அதுவே வெற்றி வாகை சூடியது. 1928 ஆண்டு முதல் 1956 ஆண்டு வரை Hockey போட்டியில் இந்தியாவுக்கு பொற்காலமாக இருந்தது. ஆறு முறை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதனால் தான் ஹாக்கி India Desiya Vilayattu ஆக உள்ளது.

அதேபோல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 29 ஆம் தேதி இந்தியாவின் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தேசிய போட்டி ஹாக்கி என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய ஹாக்கி விளையாட்டு அணியின் முன்னாள் வீரர் தயான் சந்த். இவரை போற்றும் வகையில்தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி Desiya Vilayattu Dhinam ஆக கொண்டாடப்படுகிறது.

தேசிய கனி (National Fruit of India)

இந்தியாவின் தேசிய கனி மாம்பலம் ஆகும். இந்த Mango இந்தியாவில் தோன்றிய கனி ஆகும். முக்கனியலில் ஒன்றான மாம்பலம் கனிகளின் அரசன் என அழைக்கப்படுகிறது. இந்த மாம்பலத்தின் அறிவியல் பெயர் ஆனது ரீதியாக மாங்கிஃபெரா இண்டிகா ஆகும்.

தேசிய அலுவல் மொழி

இவை அனைத்தும் இந்தியாவின் தேசிய அடையாள சின்னங்கள் ஆகும். இந்தியா பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல கோடி மக்களால் நிறைந்துள்ளது. இந்தியா சமத்துவம் நிறைந்த நாடாகும். இந்திய நாட்டில் தேசிய மொழி (National Language of India) என்ற ஒன்று இல்லை. இந்திய அரசியலமைப்பின் படி இந்தி இந்தியாவின் அலுவல் மொழி ஆகும்.

மாநிலங்களுக்கு ஏற்றார் போல் அங்கு பேசப்படும் மொழிகளுக்கேற்ப அலுவல் மொழியாக அனைத்து மொழிகளும் உள்ளன. இந்திய அரசியல் அமைப்பு கூட ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது அனைவருக்கும் சமமான சமத்துவ நாடாகும். இந்தியாவின் தேசிய சின்னங்களுக்கு இந்தியர்கள் அனைவரும் மரியாதை தர வேண்டும். தேசிய சின்னங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால், அது இந்திய தண்டனை சட்டத்திற்கு உட்பட்டதா கும். இந்த பதிவின் மூலம் இந்தியாவின் தேசிய சின்னங்கள் பற்றி தெரிந்துகொண்டோம்.

மேலும் படிக்க: Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

National Symbols – FAQ

1. இந்திய தேசிய கொடியின் நிறத்திற்கான அர்த்தம் என்ன?

நமது தேசிய கொடியில் உள்ள இளஞ்சிவப்பு நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது

2. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை?

மொத்தம் 3,372 மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago