திரைத்துறையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சில நாட்களாக இவர் செய்து வரும் செயல்களால் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு பிரபல நட்சத்திர ஜோடியாக இவர்கள் வலம் வந்தனர். இன்றுவரை அப்படிதான் உள்ளனர். இவர்களுக்கு தற்போது உயிர், உலக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. நயன்தாரா சூட்டிங் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடம் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுபோன்ற நேரங்களில் அவர் தனது சமூவ வலைதளப்பக்கங்களில் சில புகைப்படங்களையும் வெளியிடுவார். எனவே இவர்களது குடும்பத்திற்கு தனி ரசிகர்கள் உள்ளனர் என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில்தான் அவர் சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் இருந்து அன்பலோ செய்தார் என்று தகவல் பரவியது. ஆனால் அது உண்மையா என்பது இன்னும் வெளிவரவில்லை.
எனினும் சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு சோகமான பதிவை பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் என்ன காரணம் என்பது தெரியாமல் குழம்பினர். பலர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்துவிட்டது என்றும் அதன் காரணமாக தான் நயன்தாரா இதுபோன்ற பதிவினை பகிர்ந்துள்ளார் என்றும் கூறினர்.
இவை ஒருபுறம் இருக்க நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Umm i’m lost என்று பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக இவரது ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்தனர். பலர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று கூறினர்.
இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை நயன்தாரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் செல்லும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவில் Traveling With My Boys After So Long என்று இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற வதந்திக்கு அவர் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: I am Lost: நயன்தாராவின் புதிய பதிவால் பரபரப்பு..! என்ன காரணம்? |