HomeசினிமாI am Lost: நயன்தாராவின் புதிய பதிவால் பரபரப்பு..! என்ன காரணம்?

I am Lost: நயன்தாராவின் புதிய பதிவால் பரபரப்பு..! என்ன காரணம்?

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகவும் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து இயக்குனர் விக்னேஷ் சிவனை சில வருடங்களுக்க முன் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தான் சில நாட்களாகவே இவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இதேப்போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

பிரபல நடிகையான நயன்தாரா (Nayanthara) கடந்த 2022-ம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை (Vignesh Shivan) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் என்னும் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன் பிறகு இவர்கள் திருமணமான நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். இதுவும் அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்களை பிடிக்காத மக்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். இவர்களுக்கு இவர்களது அழகிய குடும்பத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூறவேண்டும்.

Nayanthara Instagram Story

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அவர்களின் சிறு அசைவு கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்பாலே (Nayanthara unfollowed Vignesh Shivan) செய்து விட்டார் என்று தகவல் வெளியானது. இது நிகழ்வு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி (Nayanthara Instagram Story) பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர் Umm i’m Lost என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த பதிவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: சோகமான பதிவுடன்..! விக்னேஷ் சிவனை திடீரென Unfollow செய்த நயன்தாரா..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular