மருத்துவ படிப்பை மாணவ மாணவிகள் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தேர்வு தான் இந்த நீட் தேர்வு. இது ஒரு நுழைவு தேர்வு ஆகும். கடந்த சில வருடங்களாகவே நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வானது எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இது போல தான் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த பிறகு முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்எஸ் மற்றும் எம்டி போன்ற படிப்புகளில் சேர்ந்துப் படிப்பதற்கும் முதுநிலை நீட் தேர்வுகள் எழுத வேண்டும். இந்நிலையில் தான் இந்த வருடத்திற்கான முதுநிலை நீட் தேர்வு முதலில் ஜூலை 7-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்த தேர்விற்கான தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது (Neet Exam Date Changed). தேர்தல் வரவிருப்பதால் இந்த தேர்வின் தேதியானது மாற்றப்பட்டுள்ளதாக (PG Neet Exam Date Changed) தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி இந்த வருடத்திற்கான முதுநிலை நீட் தேர்வானது வரும் ஜீன் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த தேதி மாற்றத்தினால் மாணவர்கள் 14 நாட்களுக்கு முன்பே தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: CSK vs RCB Match: முதல் போட்டி நடக்க உள்ள மைதானத்தில் பிட்ச் எப்படி இருக்கு? |