Homeசினிமாபிரபல கமல் பட இயக்குனர் திடீரென மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

பிரபல கமல் பட இயக்குனர் திடீரென மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

திரைத்துறையை சேர்ந்தவர்கள் திடீரென உயிரிழப்பது தொடந்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கி மற்றும் பிரபல கமல் படத்தின் இயக்குனர் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் சிலர் தான் தனக்கென தனி முத்திரையை இந்த திரையுலகில் படைப்பர். அதுபோல உள்ளவர்களில் ஒருவர் தான் இயக்குனர் துரை.

இவர் தமிழ் திரையுலகில் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் மக்களுக்கு பிடித்தாற்போல இருக்கும். எனவே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நீயா. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

அன்றைய காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் இந்த நீயா. இந்த படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் துரை. இப்படம் மட்டுமின்றி இவர் தமிழ் ரஜினி நடிப்பில் 1978-ம் ஆண்டு வெளியான ஆயிரம் ஜென்மங்கள், 1982-ம் ஆண்டும் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான துணை, கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் இந்த துரை.

மேலும் இவர் இயக்கிய அவளும் பெண்தானே, பசி ஆகிய படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளையும் இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இன்று அவர் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். எனவே திரையுலகினர் பலரும் இவரது மறைவிற்கு (Director Durai Death News) இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Durai Death
இதையும் படியுங்கள்: Thalaivar 171 Title Reveal: இன்று மாலை வெளியாகிறது தலைவர் பட தலைப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular