Homeசமையல் குறிப்புகள்Nellikai Mor Recipe: அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கு சத்து மிகுந்த நெல்லிக்காய் மோர்…

Nellikai Mor Recipe: அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கு சத்து மிகுந்த நெல்லிக்காய் மோர்…

Nellikai Mor Recipe: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் குளிர்ச்சியான பழங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ணவே பெரிதும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்த படியே எளிமையான முறையில் செய்யக்கூடிய சுவையான சத்துள்ள நெல்லிக்காய் மோர் செய்வது எப்படி(Nellikai Mor Recipe in Tamil) என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வெயில் காலம் என்றாலே அனைவரின் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதன் காரணமாக சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் மற்றும் தண்ணீர் குடிக்காத அவர்களுக்கு இது போன்ற தலைவலி ஏற்படும். இன்னும் சிலருக்கு அதிகப்படியான வெப்பம் காரணமாக உடல் சூட்டினால் வயிற்று வலி ஏற்படும்.

இதற்காகவே வெய்யில் காலங்களில் பொது இடங்களில் நீர் பந்தல்கள் மற்றும் மோர் பந்தல்கள் தன்னார்வலர்கள் சார்பில் அமைக்கப்படுகின்றன. இதுபோன்று தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளவர்கள் இந்த நெல்லிக்காய் மோர் குடித்தால் அவர்களின் உடல் சூடு குறையும் என கூறப்படுகிறது.

நெல்லிக்காய் மோர் செய்வது எப்படி (Nellikai Mor Seivathu Eppadi) Nellikai Mor Recipe

மோர் மிகவும் குளிர்ச்சியான பானம் ஆகும். அனைவர் வீட்டிலும் மோர் இருக்கும். இந்த கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க மோருடன் நெல்லிக்காய் (Amla Buttermilk) சேர்த்து குடியுங்கள். இந்த நெல்லிக்காய் மோர் செய்வது எப்படி மற்றும் தேவையான பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Nellikai Mor Ingredients)

  • தயிர் – 2 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • நெல்லிக்காய் (நறுக்கியது) – 5
  • இஞ்சி – 1 துண்டு
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 3
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • புதினா – தேவையான அளவு

செய்முறை (How To Make Nellikai Mor)

  • முதலில் நெல்லிக்காய் நன்கு சுத்தமாக கழுவி எடுத்து சிறிய துண்டாக நறுக்கி அதில் உள்ள கொட்டையை எடுத்து விட வேண்டும்.
  • அதேபோல் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அறைக்கவும்.
Nellikai Mor Seivathu Eppadi
  • அதன் பிறகு அதில் நறுக்கிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
  • நெல்லிக்காய் மோர் மிக்ஸியில் இருந்து ஒரு டம்ளரில் மாற்றி அதில் சிறிது கருவேப்பிலை மற்றும் புதினா தூவினால் பார்க்க அழகாக இருக்கும். இப்போது சுவையான குளிர்ச்சியான நெல்லிக்காய் மோர் தயார்.

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of Mor)

  • மோரை தினமும் குடிப்பதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும் மேலும் இதையம் ஆரைக்கியமாக இருக்கும்.
  • மோர் (Mor) மிகவும் குளிர்ச்சியான பானம் என்பதால் உடல் வெப்பத்தை குறைக்கும். எனவே வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.
  • வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் மோருடன் இஞ்சி சேர்த்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகும் என கூறப்படுகிறது.
  • மோருடன் இஞ்சி சேர்த்து அரைத்து குடித்தால் அசிடிட்டியால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைக்கும்.
  • வெய்யில் காலங்களில் அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் நீர் அளவு குறைவதால் வறச்சி ஏற்படும். இந்த உடல் வறட்சியை சரி செய்வதற்கு மோர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கும், மேலும் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
Nellikai Mor Recipe: அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கு சத்து மிகுந்த நெல்லிக்காய் மோர்…

இந்த பதிவில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நெல்லிக்காய் மோர் செய்வது எப்படி (Nellikai Mor Recipe) என்பதை பதிவிட்டுள்ளோம்.

Type: Drink

Cuisine: Tamil Nadu

Keywords: Nellikai Mor Recipe, Nellikai Mor Ingredients

Recipe Yield: 2

Preparation Time: PT5M

Cooking Time: PT15M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Curd – 2 cups
  • Water – 1 cup
  • Gooseberry (chopped) – 5
  • Ginger – 1 piece
  • Cumin – 1 spoon
  • Green chillies (chopped) – 3
  • Salt – required quantity
  • Fenugreek – required quantity
  • Mint – as much as required

Recipe Instructions: முதலில் நெல்லிக்காய் நன்கு சுத்தமாக கழுவி எடுத்து சிறிய துண்டாக நறுக்கி அதில் உள்ள கொட்டையை எடுத்து விட வேண்டும். அதேபோல் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அறைக்கவும். அதன் பிறகு அதில் நறுக்கிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். நெல்லிக்காய் மோர் மிக்ஸியில் இருந்து ஒரு டம்ளரில் மாற்றி அதில் சிறிது கருவேப்பிலை மற்றும் புதினா தூவினால் பார்க்க அழகாக இருக்கும். இப்போது சுவையான குளிர்ச்சியான நெல்லிக்காய் மோர் தயார்.

Editor's Rating:
4.47
மேலும் படிக்க: சுவையான குலு குலு பாதாம் பால் செய்வது எப்படி..! ஈஸியா செய்யலாம் வாங்க..!

Nellikai Mor Recipe – FAQ

1. நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?

தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்ணை சரி செய்யும், இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.

2. நெல்லிக்காயில் உள்ள அமிலம் என்ன?

நெல்லிக்காயில் சிட்ரிக் அமிலம் உள்ளது.

3. மோரில் உள்ள அமிலம் என்ன?

மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது. மோர் குடிப்பதால் செரிமான திறன் அதிகரிக்கும் மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular